Perundhalaivar Kamarajar - Biography History..

 History
தாய்நாட்டின் பணியில் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட தியாகத்தின் ஒளிவிளக்கு காமராஜர். நாட்டுப்பற்று, தன்னலமின்மை, கொள்கைகளில் உறுதி, அஞ்சாமை. எளிமை கடுமையான உழைப்பு, நேர்மை ஆகியவற்றால் அவர் இமயமென உயர்ந்தார். நாடே அவரது திருக்கோயில், மக்களே அவர்தம் தெய்வங்கள், மக்கள் தொண்டே அவரது குறிக்கோள் காங்கிரசே அவரது உயிர் மூச்சு காந்தியடிகள் காட்டிய பாதையே அவரது வாழ்க்கை முறை. அவர் படித்தவர் அல்லர். ஆனால் அவரே ஒரு நூலாக விளங்கினார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் விருதுபட்டி என்பது ஓர் ஊர். அது தற்போது விருதுநகர் என்ற நகரமாக விளங்குகிறது. அவ்வூரிலுள்ள தேங்காய் வியாபாரி குமாரசாமி நாடாருக்கும். சிவகாமி அம்மையாருக்கும் 15 7-1903ல் காமராஜர் பிறந்தார். இவரது பிள்ளைத் திருநாமம் காமாட்சி, நாகம்மாள் இவரது தங்கை. இவரது ஆறாவது வயதில் தந்தை காலமாகி விட்டார். தாய்மாமன்
கருப்பையா நாடாரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இவர் ஆறாம் வகுப்பு வரையில் தான் படித்தார். பின்னர் தாய்மாமன் நடத்தி வந்த துணிக்கடையில் பணியாற்றினார். மதம் கொண்ட கோயில் யானையை இவர் சிறு வயதிலேயே அமைதிப் படுத்தினார். துணிக்கடையில் வேலை செய்யும் போதே செய்தித்தாள்ளைப் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. விடுதலை இயக்கக் கூட்டங்களுக்குச் செல்வார்.

சேலம் டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு திரு.வி.கல்யாண சுந்தரனார், சத்தியமூர்த்தி முதலியோரின் சொற்பொழிவுகள் அவரை ஈர்த்தன. அவரது உள்ளத்தில் நாட்டுப்பற்று வளர்ந்தது. அப்போது திலகரும் அன்ளி பெசண்ட் அம்மையாரும் Home rule league (தன்னாட்சி மன்றம்) நடத்தினார்கள். இவரது உள்ளம் அந்த இயக்கத்தில் ஈடுபட்டது. காங்கிரஸ் பணியே அவரது வாழ்க்கையாயிற்று. 1919ஆம் ஆண்டில் டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு விருதுநகரில் பேசினார். அந்தப் பொதுக் கூட்டத்தைக் காமராஜர் சிறப்பாக நடத்தினார். அவர் காமராஜரின் திறமையைப் பாராட்டினார்.

இவர் விடுதலை இயக்கத்தில் ஈடுபடுவதை அவர் குடும்பத்தினர் விரும்பவில்லை. அவரைத் திருவளந்த புரத்திற்கு அனுப்பினார்கள். அங்கு இவருடைய மற்றொரு தாய்மாமன் காய்கறிக்கடை வைத்திருந்தார். கடையில் வேலை செய்ய ஆரம்பித்தார். அங்கு அவரது விடுதலை இயக்கப் பணிகள் தொடர்ந்தன.

வைக்கம் என்ற ஊரில் குறிப்பிட்ட சில தெருக்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைவதற்குத் தடை இருந்தது. அந்தத் தடையை நீக்கச் சத்தியாக்கிரகம் நடந்தது. காமராஜர் அதில் பங்கு கொண்டார். காந்தியடிகள் கேரளத்திற்குச் சென்றார். தடைகள் நீங்கின. அந்த அறப்போரில் காமராஜருக்கு வெற்றி கிடைத்தது.
காமராஜர் விருதுநகருக்கே வந்து சேர்ந்தார். குடும்பம் வறுமை நிலையில் இருந்தது. அரசியல் ஈடுபாடு குறையவில்லை. திருமணம் செய்து கொள்ளுமாறு குடும்பத்தாரர்கள் வற்புறுத்தினார்கள். நாடு விடுதலை பெறும் வரையில் திருமணம் செய்து கொள்ளப்போவ தில்லை. என்று உறுதியாகச் சொல்லி விட்டார். நாடு விடுதலை பெற்ற பின்னரும் இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

அப்போது ஜஸ்டிஸ் கட்சி (தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்) ஆங்கிலேயரின் ஆதரவுடன் மந்திரி சபை அமைத்து ஆட்சி செய்து வந்தது. அவர்களுக்கு எதிராகக் காமராஜர் பிரசாரம் செய்தார். ஓரளவு வெற்றியும் பெற்றார்.

1923ல் நாகபுரியில் கொடிக் கிளர்ச்சி நடந்தது. அதற்குத் தொண்டர்களைத் திரட்டினார் காமராஜர். அது ஓரளவு அமைதி செய்யப்பட்டது. சென்னை மவுண்ட் ரோட்டில் இருந்த நீல் சிலையை அப்புறப்படுத்த ஒரு கிளர்ச்சி நடந்தது. காமராஜர் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து ஒரு தொண்டர் படையைத் திரட்டிக் கொண்டு சென்னை வந்து 1925இல் காந்தியடிகளைச் சந்தித்தார். காங்கிரஸ் மாநாட்டில் சிலையை அகற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீல் சிலை பின்னர் அகற்றப் பட்டது.

1928ல் சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்தது. அதற்கு நாடு முழுவதிலும் எதிர்ப்புத் தோன்றியது தமிழ் நாட்டில் திரும்பிப் போ என்ற முழக்கத்தைச் சிறப்பாக நடத்தியவர்களுள் காமராஜர் குறிப்பிடத்தக்கவர். 1930ல் நடந்த வேதாரண்யம் உப்புச் சத்தியக்கிரகத்திலும் காமராஜர் பங்கு கொண்டார். இரண்டாண்டு சிறைத் தண்டனை அடைந்தார். காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானதும் விடுதலை செய்யப்பட்டார். 


அந்த ஒப்பந்தம் விரைவில் முறிந்தது. காமராஜர் கைது செய்யப்பட்டு வேலூர்ச் சிறையில் ஒரு வருடம் வைக்கப் பட்டிருந்தார்.

காமராஜர் நாட்டுப்பற்று மிகுந்தவர். நாடாண்ட அந்நியரைத் தமது நா வன்மையால் நடுங்க வைத்த சத்திய மூர்த்தியின் சீடர் காமராஜரின் கருத்தாழமும் சிந்தனைத் தெளிவும் செயலாற்றும் திறனும் சத்திய மூர்த்திக்குப் பிடித்திருந்தன. சத்தியமூர்த்தியின் உற்ற தோழராகக் காமராஜர் விளங்கினார். 1954ஆம் ஆண்டில் காமராஜர் தமிழ் நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றும் நேராகச் சத்தியமூர்த்தியின் இல்லத்திற்குச் சென்று அவரது மனைவியாரை வணங்கி வாழ்த்துக்களைப் பெற்றார்.

1936ஆம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகச் சத்தியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவரது செயலாளராகக் காமராஜர் பணியாற்றினார். 1940ம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகக் காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது சத்தியமூர்த்தி இவருக்குச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

இவ்வாறு தமிழ்நாட்டில் தொடங்கிய காமராஜரின் தலைமை படிப்படியாக விரிவடைந்து அனைந்திய அளவில் நிலை பெற்றது. 1937ல் சென்னை மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் காமராஜர் விருதுநகர்த் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டாவது உலகப்பெரும் போரில் இந்தியர்களது விருப்பத்துக்கு மாறாக இந்தியாவை ஆங்கிலேய அரசு போரில் ஈடுபடுத்தியது. காந்தியடிகள் அதில் கைதானார். அவர் சிறையிலிருந்த போது நகராட்சிக்கு இவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். விடுதலை பெற்ற பிறகு விருதுநகர் சென்று அங்கத்தினர்களுக்கு அப்பதவியிலிருந்து விலகினார். நன்றி 1942ஆம் ஆண்டு கூறி ஆகஸ்டு 60 மாதத்தில் வெள்ளையனே வெளியேறு' என்ற இயக்கம் காட்டுத் தீப் போல இந்தியா முழுவதும் பரவியது. காமராஜர் போலீசாரின் பிடியில் கிடைக்கவில்லை. தலைமறைவாகத் தமிழ்நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று தொண்டர்களைத் தூண்டி விட்டார். பின்னர் விருதுநகர் சென்று கைதானார். முதலில் அமராவதி சிறையிலும் பின்னர் வேலூர்ச் சிறையிலும் வைக்கப்பட்டார். 1945ல் விடுதலையானார்.

இந்தியா விடுதலை அடைந்ததும் நடந்த முதல் பொதுத் தேர்தலில் காமராஜர் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1954ஆம் ஆண்டில் இராஜாஜி தமிழ் நாட்டின் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியதும் காமராஜர் முதலமைச்சரானார். 13-4-1954 தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அடுத்த இரண்டு தேர்தல்களிலும் அவருடைய அமைச்சர் அவை தொடர்ந்து நீடித்தது.

'படிக்காதவர்' என்று கூறப்பட்ட காமராஜரின் அமைச்சர் அவை தமிழ்நாட்டில் ஒன்பது ஆண்டுகள் செயற்பட்டது. தமிழ்நாடு இந்தியாவிலேயே சிறந்த நிர்வாகத்தைக் கொண்ட மாநிலம் என்று பெயரெடுத்தது. கல்வி, தொழில், பொருளாதாரம், விவசாயம் ஆகிய துறைகளில் தமிழ்நாடு வியக்கத்தக்க முன்னேற்றத்தைக் கண்டது. மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்ந்தது.

கல்வியைப் பரப்பக் காமராஜர் பல திட்டங்களை வகுத்தார். புதிய பள்ளிகள் பல திறக்கப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் அறிமுகம் ஆயிற்று. பள்ளி மாணவர்களுக்குச் சீருடைகள் வழங்கப் பட்டன. பிற்படுத்தப்பட்ட வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சலுகைகள் அளிக்கப்பட்டன. எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு துறையில் கல்வி இலவசம் ஆயிற்று, தமிழ்நாடு முழுவதும் பல தொழில் நுட்பப் பள்ளிகள் திறக்கப்பட்டன. இவ்வாறு காமராஜர் ஆட்சியில் கல்வி பொது உடைமை ஆயிற்று.
தமிழ்நாடு அவரது ஆட்சியில் மின்சாரத் துறையிலும் வியக்கத்தக்க சாதனைகளைக் கண்டது. தமிழ் நாட்டில் சின்னஞ்சிறு கிராமங்களிலும் மின்சார வசதி அளிக்கப் பட்டது. பல நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டன. கிராமங்களில் குடிநீர் வசதிகள் பெருகின. எளிய மக்கள் வீடு கட்டிக் கொள்ளத் திட்டங்கள் உருவாயின. பல புதிய சாலைகள் போடப்பட்டன. ஏராளமான மருத்துவ நிலையங்கள் ஏற்பட்டன. மக்கள் நல்வாழ்வுக்கான அனைத்தும் கிடைத்தன.

அவர் மக்களோடு எப்பொழுதும் தொடர்பு கொண்டிருந்தார். நாடு முழுவதும் சுற்றினார். மக்களை நேரில் சந்தித்தார்.

மக்களின் குறைகளைக் கேட்டார். விரைந்து முடிவுகளை எடுத்துச் செயற்படுத்தினார். காமராஜர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டதில் அவருடைய சகாக்களான எம்.பக்தவத்சலம், சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன் ஆகியோருக்குச் சிறப்பான பங்குண்டு.

காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த போது 1955ல் ஆவடியில் காங்கிரஸ் மகாசபை கூடியது. இந்திய வரலாற்றில் அது ஒரு திருப்பு முனையாகும். இந்தியாவில் சோஷலிச வடிவச் சமுதாயம் அமைய வேண்டும் என்று அந்த மாநாட்டில் தான் முடிவு எடுக்கப் பட்டது. ஆவடி காங்கிரஸ் மிகச் சிறப்பாக நடந்தது. காமராஜரின் பேராற்றலைக் கண்டு அனைவரும் வியந்தனர். ஜவஹர்லால் நேரு காமராஜரின் ஆற்றலை நேரில் கண்டு போற்றினார்.

9-10-1961ல் காமராஜரின் சிலையைச் சென்னையில் நேரு திறந்து வைத்தார். அனைத்திந்திய அரங்கில் பெருந் தலைவராக பிழை கூற முடியாது. பெருமகனாக காமராஜர் உயர்ந்து விட்டார் என்பதை அந்நிகழ்ச்சி காட்டியது.

பதவிப் பொறுப்புகளில் இருக்கும் மூத்த தலைவர்கள் அப்பொறுப்புக்களிலிருந்து தாமாக விலகி மக்களிடையே மேலும் நெருக்கமாகப் பழகி இயக்கத்தை வளமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் 1963ஆம் ஆண்டில் காமராஜர் ஒரு திட்டத்தினப் பிரதமர் நேரு அவர்களிடம் அளித்தார். அதுவே காமராஜர் திட்டம் என்ற வரலாற்றில் இடம் பெற்றது. காங்கிரஸ் மகாசபை அத்திட்டத்தை ஏற்றுக் கொண்டது.

அதன்படி காமராஜர் 2-10-1963ஆம் நாள் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். அதே போல் பல மத்திய அமைச்சர்களும் மாநில முதலமைச்சர்களும் பதவியில் இருந்து விலகினர். 1964 ஜனவரியில் ஒரிசாவிலுள்ள புவனேஸ்வர் நகரில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அதற்குக் காமராஜர் தலைமை வகித்தார். நமது தலைமை உரையைத் தமிழில் படித்தார். 'நடத்தையில் எளிமை, மனித குலத்துக்குச் சேவை இந்த இரு எளிய கருவிகளின் துணையுடன் நம் இந்தியாவை அமைப்போமாக' என்று தமது தலைமை உரையில் கூறினார். இவ்வாறு ஜனநாயக சோஷலிச வழிமுறையைப் புவனேஸ்வரக் காங்கிரஸ் அமைத்தது.

27-5-1964ஆம் நாள் பிரதமர் நேரு அவர்கள் அமரரானார். ஆசிய ஜோதி அனைத்தும் அவரது மறைவுக்குப் பின் காமராஜரின் பொறுப்புகள் அதிகமாயின. நேருவுக்கு அடுத்தப்படியாக யார் பிரதமர் என்ற கேள்வி எழுந்தது. லால்பகதூர் சாஸ்திரியைப் பிரதமராக்கினார்.

இந்திய-பாகிஸ்தான் போரின் முடிவை - ஒரு அமைதி வழி காண்பதற்காகப் பிரதமர் லால்பகதூர் 
சாஸ்திரி ரஷ்ய நாட்டுத் தலைவரின் விருப்பப்படி தாஷ்க் ணடு என்னும் நகருக்குச் சென்றார். அமைதி உடன்பாடு ஏற்பட்டது. 10-1-1966 இரவு லால் பகதூர் சாஸ்திரி அங்கேயே காலமானார். மீண்டும் சிக்கல் எழுந்தது.

காமராஜரே பிரதமராக வர வேண்டும் என்று பலர் விரும்பினர். ஆனால் அவர் ஒப்புக் கொள்ள வில்லை. திருமதி இந்திராகாந்தி அம்மையாரைப் பெரும்பான்மை யினரின் ஆதரவுடன் பிரதமராக்கினார்.

1966ஆம் வருடம் பொதுத் தேர்தலில் காமராஜர் வெற்றி பெறவில்லை. அவர் மனம் கலங்காமல் நின்றார். தமது அரசியல் பொது வாழ்வுப் பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார். திருமதி இந்திராகாந்தி அம்மையார் மீண்டும் பாரதப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படப் பணியாற்றினார்.

நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலிலும் பின்னர் 1971 பொதுத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பொது வாழ்வில் ஒழுக்கம் இன்றியமையாதது

என்று அவர் வற்புறுத்தினார். 2019ல் காமராஜர்

அமரரானார். செய்தி அறிந்த இந்திராகாந்தி சென்னைக்கு

வந்து காமராஜரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.

கிண்டியில் காந்தி மண்டபத்திற்குப் பக்கத்தில் காமராஜரின் நினைவாலயம் எழுப்பப்பட்டது. காமராஜருக்குப் பாரத ரத்னா பட்டத்தை அளித்து இந்திய அரசு பெருமைப்படுத்தியது. காமராஜர் இந்திய விடுதலை வீரர்களுள் ஒருவர் உழைப்பால் உயர்ந்தவர். ஏழைகளுக்கு இரங்கியவர். எளியவர் துயர் துடைத்தவர். அரசியல் மேதையாகத் திகழ்ந்தவர். அரசியல் துறவியாக வாழ்ந்தவர். அவர் குடியிருந்த வீடு தியாகராய நகர் திருமலைப்பிள்ளை தெருவில் உள்ளது. அதை அரசாங்கம் வாங்கிக் 'காமராஜரின் நினைவாலய' மாகச் செய்துள்ளது.