வணிகத்திற்காக வந்த ஆங்கிலேயர்கள் இங்கே இருந்த அரசியல் சூழ்நிலையால் அதில் தலையிட்டு முதலில் வரி வசூல் செய்யும் உரிமை என்ற வகையில் தலையிட்டனர். சிலர் கப்பம் செலுத்தி சமாதானம் செய்து கொண்டது. அவர்களை மேலும் ஊக்கப்படுத்தியது. ஆன போதும் ஆங்காங்கே பலமான எதிர்ப்புக் குரல், சுதந்திர உணர்வில் அன்றே ஒலிக்க ஆரம்பித்தது. 'வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் கொடுக்க வேண்டும் கிஸ்தி?' என வீர முழக்கமிட்டு, பலமாக எதிர்ப்புக் காட்டி போரிட்டு இறுதியில் தூக்கு மேடையை முத்தமிட்ட சமயத்திலும் வீரம் காட்டிய வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற அழியாத பெயர் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் முதலிடம் பெறுகிறது எனலாம். தமிழ் நாட்டு சிங்கம் என இவரை வர்ணிப்பதில் தவறு ஏதும் இல்லை. இவரது வரலாறு ஒரு வீர வரலாறு. இவரது முன்னோர்கள் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள். பாஞ்சாலங்குறிச்சி சிற்றரசர் வாரிசாக கி.பி.1790இல் அரசராக பதவிக்கு வந்தவர் இவர். அப்போது அவருக்கு வயது 47. இவரது தந்தையார் திக்கு விசய கட்டபொம்மு, வீரபாண்டிய கட்டபொம்மன் நல்ல சிவந்த நிறமுடையவர். எனவே இவரை சிவத்தையா என்று 12