மரணத்திற்கு போட்டி


அக்பரின் அரச சபையில் நாளுக்கு நான் பீர்பாலுக்கு ஏற்பட்டிருந்த மதிப்பும் மரியாதையும் அமைச்சர் அனைவருக்கும் அதிக பொறாமையை ஏற்படுத்தியது. அக்பரின் அரச சபையில் இருந்த பாடகர்களில் தான்ஸேன் புகழ் பெற்று விளங்கினார். பீர்பாலுக்கு அளிக்கப் பட்டிருந்த அந்தஸ்தை தான்சேனுக்கு வழங்குமாறு தான்ஸேனின் ஆதரவாளர்கள் அக்பரிடம் வேண்டுகோள் விடுத்தார்கள்.

'அன்பர்களே! தான்னேன் ஒப்பற்ற கலைஞர். அவரது திறமையும் பெருமையும் இசைத் துறையில் இன்னும் எத்தனையோ சாதனைகள் நிகழ்த்த உள்ளார் என்பதை உலகுக்கே எடுத்துக் கூறும்! ஆனால் அவருக்கு அரசியலில் ஆர்வமோ அறிவோ சிறிதளவும் கிடையாது! பீர்பால் அரசியலில் நுணுக்கமும் புத்திசாலித்தனமும் நிறைந்தவர். ஆகவே அவரவர் திறமைக்கு தகுந்த மாதிரி பொறுப்பான பதவியும் வழங்கப்பட்டுள்ளது'என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார் அக்பர். தான்ஸேனை விட பீர்பால் புத்திசாலியானவர் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று முடிவு செய்தார்.

அயல்நாட்டு அரசனும் அக்பரின் நெருங்கிய நண்பருமான ஒருவருக்கு கடிதங்களை எழுதினார். ஒவ்வொன்றிலும் 'அன்பார்ந்த நண்பரே! இக்கடிதங்களை தங்களிடம் ஒப்படைக்கும் எனது நாட்டு பிரஜையை உடனே சிறையில் அடைத்து விடவும்! அடுத்த நாள் தூக்கிலிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்!' என்று எழுதி இருந்தார் அக்பர்.

இரண்டு கடிதங்களில் ஒன்றினை தான்ஸேனிடமும், மற்றொன்றை பீர்பாலிடமும் கொடுத்து குறிப்பிட்ட அரசரிடம் சேர்த்து விடுமாறும் கூறினார்.

தான்சேனும் பீர்பாலும் அடுத்த நாளே கடிதத்தை எடுத்துச் சென்றார்கள். அரசரிடம் கடிதத்தைக் கொடுத்தார்கள். கடிதத்தைப் படித்துப் பார்த்த அரசர் அதிர்ச்சி அடைந்தார். தான்ஸேனைப் பற்றியும் பீர்பாலைப் பற்றியும் நிறைய கேள்விப்பட்டிருந்தான். அரசன்.

'இவர்களை நான் கொல்ல வேண்டும்' என்று எதனால் எழுதியிருக்கிறார்? இவர்கள் என்ன தப்பு செய்தார்கள்? என்று தெரியவில்லை! இவர்களை பற்றி அதற்கு பின்பு ஒரு முடிவுக்கு வரலாம்! தீர்மானித்தார். என்று

'அன்பர்களே, உங்கள் நாட்டு அரசன் என்னிடம் கொடுக்க சொன்ன கடிதத்தில் உங்களை சிறையில் அடைத்து கொலை செய்ய சொல்லியிருக்கிறார். ஆனால் நான் உங்களை உடனடியாக கொலை செய்துவிடப் போவதில்லை! ஒரு வாரம் சிறையில் இருங்கள்! உங்களுக்கு அறுசுவை விருந்துடன் உணவு படைக்கச் சொல்லுகிறேன். அதற்கு பின் உங்கள் அரசரின் ஆணைப்படி மரண தண்டனைதான்! என்று அரசன் கூறியதும் தான்சேன் நிலை குலைந்து போனார்.

பீர்பால் மன்னரின் மனம் மகிழ எத்தனை முறை ஸித்தாரை மீட்டி பாடியிருப்பேன். அவர் எனக்கு
இப்படியொரு தண்டனையை எதற்காக கொடுக்க நீங்களோ அரசியலில் சிறந்த ஆலோசகராகவும் சிறந்த நண்பராகவும் இருந்தீர்கள்! உங்களுக்கு இப்படியொரு கொடுமையை அக்பருக்கு எப்படி வந்தது?' என்று வேதனையோடு குறையாக கூறினார் தான்ஸேன்.

நீண்ட யோசித்துக் கொண்டிருந்த பீர்பால். 'நண்பரே, கவலைப்படாதீர்கள்! இந்த இக்கட்டான சூழ்நிலையிலிலிருந்து நாம் எப்படியும் தப்பித்து விடலாம்! வாரத்திற்கு பின்பு அரசர் நமக்கு மரண தண்டனை கொடுத்து உத்தரவு இடுவதற்கு 'முதலில் என்னை கொலை செய்ய வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரு கூறவேண்டும்! முன்பு நடக்கிறது

ஒரு வாரம் பீர்பாலுக்கும் தான்ஸேனுக்கும் அறுசுவை விருந்தும் உபசரிப்புமாய் கழிந்தது. அடுத்த வீரர்கள் தான்ஸேனையும் அரசர் முன் நிறுத்தினார்கள்.

'அரசே என்னை முதலில் கொன்று விடுங்கள்! என்றார் பீர்பால், அவரை பின்னுக்கு தள்ளிவிட்டு 'அரசே என்னை தான் கொல்ல வேண்டும்! என்று கெஞ்சினார் தான்ஸேன். இருவரும் மாறி மாறி 'தங்களைத்தான் முதலில் கொல்ல வேண்டும் என்று மன்றாடினார்கள். அரசருக்கோ ஒன்றும் புரியவில்லை. அதிசயமாகப் பார்த்தார்.

என்ன ஆச்சர்யமாக இருக்கிறதே! சாவதற்கு கூட போட்டியா? உங்களில் யாரை முதலில் கொன்றால் என்ன? அதனால் உங்களுக்கு என்ன பலன் ஏற்படப் போகிறது? என்று கேட்டார் அரசர்.

'அரசே, என்ன அப்படி சொல்லி விட்டீர்கள்? அது ஒரு ரகசியம்! அக்பருக்கு உங்கள் நாட்டை அபகரிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஒரு ஆசை உண்டு. யுத்தமில்லாமல் அதை செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதற்காக ஜோஸ்யர் ஒருவரை வரவழைத்து விசாரித்தார். 'உங்கள் நாட்டுக்கு இரண்டு பேரை அனுப்பி கொலை செய்ய உத்தரவிட்டு, அதில் யார் முதலில் கொலை செய்யப்படுகிறார்களோ அவர்கள் இந்நாட்டின் மன்னனாகவும் அடுத்து கொலை செய்யப்படுபவர் அமைச்சராகவும் ஆவதற்கு நேரிடும் என்று ஜோஸ்யர் கூறியதால் தான் இந்த ஏற்பாடு. மன்னராகவும் மந்திரியாகவும் நாங்கள் பதவி ஏற்ற பின்பு இந்நாட்டை அக்பரின் ஆளுகைக்குட்பட்டு நாடுகளுடன் சேர்த்துக் கொள்வார்! இதுதான் அக்பரின் திட்டம்!' என்று கூறி முடித்தார் பீர்பால்.

அரசருக்கு தலை சுற்றியது. ரகசியத்தை பீர்பால் கூறியதும் அரசர் அதிர்ந்து போனார்.

'அரசே ரகசியத்தை கூறிவிட்டேன். முதலில் எனக்கு மரண தண்டனையை நிறைவேற்றுங்கள் என்று வேண்டினார் பீர்பால். 

'

என் நாட்டை அபகரிக்க இப்படியொரு சதிதிட்டத்தை தீட்டியிருக்கிறார் உங்கள் அரசர்! என்னிடம் அது பலிக்காது எங்கள் நாட்டில் இனியும் உங்களை நிற்க வைத்திருப்பது எனக்கு தான் ஆபத்து. உடனே இங்கிருந்து போய்விடுங்கள்! என்று இருவரையும் வீரர்களை விட்டு விரட்டி அடிக்கச் சொன்னார் பீர்பாலும் தான்ஸேனும் மகிழ்ச்சியுடன் ஓடி வந்தார்கள். அக்பரிடம் நடந்த அனைத்து விபரங்களையும் கூறினார். அமைச்சர்களும் தான்ஸேனின் ஆதரவாளர்களும் பக்கத்தில் இருந்தவர்கள்.

'பார்த்தீர்களா நண்பர்களே! பீர்பால் தமது மதிநுட்பத்தால் மரண தண்டனையை வென்று வந்திருக்கிறார். இப்பொழுது சொல்லுங்கள்! பீர்பால் நான் அளித்திருக்கும் பதவிக்கு தகுதி வாய்ந்தவர் தானே? என்று கேட்டார் அக்பர்.

அமைச்சர்கள் அனைவரும் வாய்மூடி மௌனமாக

நின்று கொண்டிருந்தார்கள்.

Tamil Old Stories