இந்தியாவிற்கும் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் மிக நீண்ட காலமாகவே தொடர்பிருந்தது. பண்டைய கிரேக்கம், ரோம் போன்ற நாடுகளுடன் வணிகத் தொடர்பு இருந்தது. அதோடு அலெக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்பு. மார்க்கோபோலோ, யுவான் சுவாங், பாஹியான் போன்ற யாத்ரீகர்கள் குறிப்பு. இந்திய மன்னர்களின் படையெடுப்பு போன்றவற்றால் இந்தியா பற்றி மேலை நாடுகளும் - கீழை நாடுகளும் நன்கு அறிந்திருந்தன. கிராம்பு, ஏலம், யானைத்தந்தம், மிளகு, மயில் தோகை, மஸ்லின் துணி போன்ற வணிகப் பொருள்கள் மேலை நாடுகளில் பிரசித்திப் பெற்றவை. 1453இல் கான்ஸ்டாண்டி நோபில் துருக்கியர் வசம் ஆனதால், ஐரோப்பியாவிற்கும் இந்தியாவிற்கும் தரைவழி பாதிக்கப் பட்டு - கடல் வழி காணவேண்டிய அவசியம் ஏற்பட்டது. வாஸ்கோடகாமா இந்தியாவிற்கான கடல்வழியைக் கண்டு பிடித்ததும் ஐரோப்பியரின் வணிகத்தொடர்பு அதிகமானது. போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக் காரர்கள். ஆங்கிலேயர்கள் எனப் பலரும் நாடி வந்த வணிகதேசமாய் இந்தியா விளங்கியது. இந்த வணிகப் போட்டி, அரசியல் ஆதிக்கப் போட்டியாக மாறிட ஆரம்பித்தது. இங்கே இருந்த அரசர்களின் ஒற்றுமை இல்லாமை அவர்களை ஊக்குவித்தது வியாபாரத்திற்காக வந்தவர்கள் இங்கே ஆட்சியைப் பிடிக்கும் அவலமும் நேர்ந்தது. இந்த ஆதிக்கப் போரில் ஆங்கிலேயர்கள் அதிக வெற்றியும் பெற்றனர். கோவா -டையூ டாமன் போர்ச்சுக்கீசியர் வசமும், மாஹி, ஏனாம், காரைக்கால், பாண்டிச்சேரி பிரெஞ்சுக்காரர் வசமும், நாகப்பட்டினம், தரங்கம்பாடி டச்சுக்காரர்கள் வசமும், பெரும்பாலான மற்ற பகுதிகள் ஆங்கிலேயர் வசமும் என ஓர் அடிமைச்சங்கிலி இந்தியாவில் பின்னப்பட்டது. இந்த அடிமைத்தனம் 1947 ஆகஸ்ட் 15 வரை நீடித்தது. படிப்படியாக ஆங்கிலேயர்க்கு எதிராக இங்கே எதிர்ப்பு வலுத்தது. வெறுப்பு வளர்ந்தது. மக்கள் மனதில் சுதந்திரதாகம் எழுந்தது. ஆங்கிலேயருக்கு எதிரான கிளர்ச்சிகள் எனத்தொடங்கி, இறுதியில் மக்கள் சக்தி வென்று மகத்தான மக்களாட்சி பிறந்தது. 1857இல் நடைபெற்ற சிப்பாய்க் கலகம்தான் முதல் இந்திய சுதந்திரப் போர் என அழைக்கப்படுகிறது. அது முதல் 1947 வரை ஏறத்தாழ 90 ஆண்டுகளில் நெடிய போராட்டமே நமது இந்திய சுதந்திரப்போர். இங்கே அந்நியர் ஆட்சி என்றால் அது முதன் முதலில் போர்ச்சுகீசியரால் தான் ஏற்படுத்தப்பட்டது 1510இல் கோவாவில் இது தொடங்கியது. பிறகு டச்சு. பிரெஞ்சு, ஆங்கில ஆட்சிகள் பல்வேறு இடங்களில் பல கால கட்டங்களில் உருவாகியது இதற்கு பல எதிர்ப்புகள் அரசர்களால் தெரிவிக்கப்பட்டாலும், போர் மூலம் வெளி நாட்டவர் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது. அவர்களின் நவீன இராணுவமும், தளவாடமும் கூட இதற்கு உதவின எனலாம். 1857 சிப்பாய்க்கலகத்திற்கு முன்பே 9.6.1806இல் நடைபெற்ற வேலூர் புரட்சியும் ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு கிளர்ச்சியாகவே கருதப்படுகிறது. பிறகு 1842இல் வங்களாளத்திலும், 1844இல் சிந்துவிலும், பிறகு பீகார். பஞ்சாப் போன்ற இடங்களிலும் இந்திய சிப்பாய்கள் ஆங்கிலேயருக்கு எதிராகக் கலகங்கள் செய்தனர். இவை ஆங்கிலேய அரசால் ஒடுக்கப்பட்டு தோல்வியில்தான் முடிந்தது. 1857 வரை இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய வர்த்தகக் கம்பெனி ஆட்சியே நடைபெற்றது. 1857 முதல் இந்திய சுதந்திரப் போருக்குப்பின் விக்டோரியா பேரரசியின் அறிக்கை மூலம். இந்தியாவின் ஆங்கிலேய அரசை, இங்கிலாந்து நாட்டு அரசே ஏற்றுக்கொண்டது. அதன் பிறகு ஏற்பட்ட கல்வி வளர்ச்சி, பத்திரிகை, தபால், தந்தி, போக்குவரத்து வசதிகள் மூலம் மக்கள் தொடர்பு அதிகரித்தது. சுதந்திர தாகம் எழுந்தது. சமூக சீர்திருத்தம் வளர்ந்தது. இதன் மூலமாக படித்த இந்தியர் களிடையே அடிமை வெறுப்பும், சுதந்திர உணர்வும். வளர்ந்தது. 1885இல் தோற்றுவிக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் ஆங்கிலேயர் பிரித்தாளும் சூழ்ச்சி, வங்கப் பிரிவினை (1902) திலகர் போன்றவர்களின் வீர முழக்கம் எல்லாம் சுதந்திரப் பயிர் முளைத்து வேரூன்ற துணையாயிற்று. 1910 வாக்கில் மகாத்மாவின் அரசியல் பிரவேசம். சுதந்திர தாகம் மிக அதிகமாகிட துணைபுரிந்தது. படேல், நேரு, காமராஜ். இராஜாஜி. திருப்பூர் குமரன், வ.உ.சி. என காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமாரி வரை ஆங்கிலேயர் எதிர்ப்பை அதிகமாக்கியது. உப்பு சத்தியாக்கிரகம். ஒத்துழையாமை இயக்கம் வரிகொடா இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்று படிப்படியாக நடந்த சாத்வீகப் போராட்டம் இறுதியில் வென்றது. நாடு 1947இல் ஆகஸ்ட் 15இல் விடுதலை பெற்றது. இந்த சுதந்திர தாகம் மக்கள் மனதில் எழ பாரதி போன்ற கவிஞர்களின் பாடல், அறிஞர்களின் பேச்சு, குமரன். வ.உ.சி. போன்றவர்களின் தியாகம். அவர்கள் சிறையில் பட்ட கொடுமை எல்லாமே காரணமாயின. இந்த வீர வரலாற்றை விளக்குவதாகவே எதிர்ப்புக் குரல் கொடுத்த வீரபாண்டிய கட்டபொம்மன் முதல் காந்தியார் வரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 வீரர்களின் வீர வரலாறு இனி தொடர்கிறது. இவர்களின் வரலாறு போராட்டத்தின் வரலாறு ஆகும். இனி அதைக் காண்போம். இந்திய சுதந்திரப்