Rajendra Prasad Biography Tamil...




இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் என்று வரலாற்றில் அழியாத பெயர் பெற்றவர். இவர் பீகார் மாநிலத்தில் சாரல் என்ற மாவட்டத்தில் ஜிராதேயி என்ற கிராமத்தில் பிறந்தவர் ஆவார். பிறந்த நாள் 3.12.1884. தந்தை பெயர் 'மஹாதேவ் கூஹாய்' என்பதாகும்.

கல்வியில் இள வயது முதலே மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் இரட்டிப்பு தேர்ச்சி முறையில் (DOUBLE PROMOTION) வெகு விரைவிலேயே ஆரம்பக் கல்வியை முடித்தார். பட்டப் படிப்பினை கல்கத்தா நகர் சென்று கற்க ஆரம்பித்தார். 1902இல் புகுமுக வகுப்பில் மாநிலத்திலேயே முதலாவதாக தேர்வு பெற்றார். பிறகு பி.ஏ. தேர்வு முடித்து எம்.ஏ. தேர்வையும் எழுதி வெற்றி பெற்றார். எம்.ஏ. தேர்விலும் இவர் மாநிலத்தில் முதல் இடம் பெற்றார்.

இவர் சிறந்த பேச்சாளர். படிக்கிற காலத்திலேயே நிறைய பேசுவார். அதுவும் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் சிறப்பாக பேசுவார். இவரது பேச்சு பலரையும் கவர்ந்தது.

அடுத்து பாரசீகம், அதோடு வடமொழியான சமஸ்கிருதமும் கற்று அதில் புலமை பெற்றார். முதலில் தன் பணியை டாக்டர் ராதாகிருஷ்ணன்

போலவே ஆசிரியர் பணியில் தொடங்கினார். சில காலம் இப்பணியை சிறப்புடன் முடித்த பிறகு சட்டத்துறைக் கல்வியில் நாட்டம் கொண்டார். சட்டம் படித்து மிகச் சிறந்த வழக்கறிஞராக பணிச்செய்தார். இத்தொழிலில் பணமும் புகழும் நிறையவே கிடைத்தது. முதலில் பீகார் மாநில மாணவர்களை எல்லாம்

ஒன்று சேர்த்து ஓர் அமைப்பை உருவாக்கினார். இதற்கு 'பீகார் மாணவர் சங்கம்' என்று பெயர். இதன் மூலம் மாணவர்களை சிறந்த பேச்சாளர் ஆக்கினார். கலைகளில் தேர்ச்சி பெறச் செய்தார். பல்வகைத் திறனும் அவர்கள் பெற இச்சங்கம் உதவியது.

பிறகு இவர் கவனம் அரசியல் பக்கம் திரும்பியது. இந்த சமயத்தில் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை அறிமுகம் செய்தார். 1920 வாக்கில் பிரசாத் ஒத்துழையாமை இயக்கத்தில் மிக தீவிரமாக பங்கு பெற்றார். பீகார் மாநிலம் முழுதும் பல இடங்கள் சென்று காந்தியின் இந்த அறப்போருக்கு ஆதரவு தீட்டினார்.

பீகார் ஒரு விவசாயிகள் நிறைந்த மாநிலம். பிற்பட்ட பகுதி, அந்த விவசாயிகளுக்கு பல பிரச்சினைகள். பெரும்பாலான பயிரிடும் நிலம் குத்தகைத்தாரர்களிடம் இருந்தது. கரும்பு பயிரிடும் நிலத்தில் அவுரி செடி பயிரிடும் படி அவர்கள் வலியுறுத்தினர். காரணம் அவுரி செடியின் சாயம் வெளிநாட்டில் நல்ல விலைபோயிற்று. இதற்கு பீகார் விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு உருவாயிற்று. இது பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. இப்பிரச்சினையைத் தீர்க்க பீகார் வந்த காந்தியடிகளுடன் பிரசாத் மிகவும் நெருங்கி பழகினார். இது ஒரு நல்ல தொடர்பை ஏற்படுத்தியது அது முதல் பிரசாத் காந்தி வழியில் பல வழியிலும் நாட்டுக்கு உழைத்தார். 'சாந்தாத்மா' என்று பலராலும் பிரசாத் போற்றப்பட்டார்.

1928இல் இங்கிலாந்து சென்று பல இடங்களில் சொற்பொழிவாற்றி இந்திய நிலையை விளக்கினார்.

1932இல் உப்பு சத்தியாகிரகத்தில் இவர் தீவிரமாக பங்கு கொண்டார். இதனால் இவருக்கு ஆறு மாத ஜெயில் தண்டனையும் கிடைத்தது. சிறைக்கு அஞ்சாத சிங்கமாய் இவர் தொடர்ந்து அறப்போரில் பங்கெடுத்தார். இந்த சமயத்தில் பீகாரில் நடைபெற்ற நிலநடுக்கம்.

பலத்த சேதம் தந்தது. அதன் நிவாரணப் பணிகளை பிரசாத் சிறப்பாகச் செய்தார். காசநோயால் இவர் அவதிப் பட்ட நிலையிலும் பல இடம் சென்று நிதி திரட்டி மக்கள் துயர் துடைத்தார். ஏறத்தாழ முப்பது லட்சம் நிதி திரட்டினார். அந்த காலகட்டத்தில் அது மிகபெரிய தொகை எனலாம். இதனால் மக்கள் இவரை 'பீகார் காந்தி' என்றே போற்றினார்.

1039இல் காங்கிரஸ் தலைவராகவும், 1946இல் இடைக்கால அரசில் அமைச்சராகவும் இவர் பணிபுரிந்தார். 1947இல் அரசியல் நிர்ணய சபையில் அங்கம் வகித்தார். 1950இல் முதல் குடியரசில் இவர் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார். அதோடு தொடர்ந்து 12 ஆண்டுகள் குடியரசுத் தலைவராய் இருந்த பெருமையும் இவரையே சாரும்.

1962இல் சொந்த ஊர் திரும்பி தனது 'சநாகர்' என்ற ஆசிரமத்தில் வசித்தார். 'தேசம் என்ற பத்திரிக்கை நடத்தி மக்களின் விழிப்புணர்வை பெருக்கியவர். தனது சுய சரிதையை 'என் வரலாறு' என்ற தலைப்பில் ஒரு நூலாய் இவர் எழுதினார். இது ஒரு மிகச் சிறந்த வரலாற்று நூல் போல் அமைந்தது. பீகார் வித்யா பீடத்தை உருவாக்கிய வரும் இவரே. இது நாட்டுப்பற்றை மாணவர்களிடையே விதைக்கும் கல்விக்கூடமாக செயல்பட்டது.

1903ஆம் ஆண்டு பிப்ரவரி 28இல் இவர் காலமானார். எளிமை - தியாகம் - சேவை என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்த இவரை மக்கள் 'பாபு' என போற்றி அமைக்கும் போது 'பாபு இராஜேந்திர பிரசாத்' என்றே அழைத்தனர். 1962இல் இவருக்கு இந்திய அரசு பாரத ரத்னா விருது அளித்து சிறப்பித்தது.