Lal Bahadur Shastri Biography TamiL...



இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் நாம் அவசியம் அறியப்பட வேண்டிய பெயர்களில் இவர் பெயரும் ஒன்று ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தும், வறுமையில் வாடியும் நாட்டு நலம் நினைத்த நல்லவர் வரிசையில் இந்த வல்லவரும் ஒருவர். குள்ளமான உருவம், எளிய தோற்றம் என வாழ்ந்த மாபெரும் தீரரே இவர்.

1904ஆம் ஆண்டு அக்டோபர் 2ல் இவர் பிறந்தார். அக்டோபர் இரண்டு மகாத்மா அவதரித்த நல்ல நாள். இவர் தந்தை சாரதாபிரசாத். இவர் ஓர் ஆசிரியர். இவரது தாய் ராம் துலாரி. காசிக்கு அருகில் உள்ள மோகல்சராய் என்பதே இவர் பிறந்த ஊர். இவர்களது ஒரே மகன் லால் பகதூர். லால் பகதூர் தனது இரண்டாம் வயதிலேயே தந்தையை இழந்தார். தாயார் ராம்துலாரி அவரது தந்தை ஹசாரிலால் வீட்டிற்கு சென்று தங்கினார். பாட்டனார் அன்பிலும், ஆதரவிலும் வளர்ந்தார். ஆரம்பக்கல்வியை அவ்வூரிலேயே பயின்றார். பிறகு காசியில் இருந்த தனது சித்தப்பா வீட்டில் தங்கி உயர்நிலைப் படிப்பு படித்தார்.

பள்ளி வாழ்வில் பல்வேறு திறமைமிக்கவராக லால் பகதூர் விளங்கினார். அதோடு கல்வியிலும். விளையாட்டிலும் ஆர்வம் செலுத்தினார். பள்ளி நாடகங்களில் நடிக்கவும் செய்தார்.
காதியில் பாலகங்காதர திலகர் பேசினார் பேச்சை கேட்ட லால்பகதூர் சாஸ்திரிக்கும் சுதந்திர உணார்வு வந்தது. நானும் சுதந்திரப் போரில் உலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் பிறந்தது.

காசியில் இந்து பல்கலைக்கழக மகாத்மா காந்தி பேசிய பேச்சைக் கேட்கும் வாய்ப்பும் லால் பகதூருக்கு கிடைத்தது. சாஸ்திரிக்கு வயது தான். அப்போதே காந்தியடிகள் மீது பற்று ஏற்பட்டது.

1919இல் இந்தியாவில் அறிமுகமாகியது. பெரிய நன்மைகள் ஏதும் நாடெங்கும் இதற்கு எதிர்ப்பு வலுத்தது. அந்த எதிர்ப்பை சமாளிக்க ரௌடை சட்டம் கொண்டு வரப்பட்டது. எதிர்த்து கிளர்ச்சி, பிறகு ஜாலியன் படுகொலை என நாடு இக்கட்டான நிலையில் இருந்த இந்த சமயத்தில் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை அறிமுகப் படுத்தினார். இதனை ஏற்று சாஸ்திரி மெட்ரிகுலேஷன். தேர்வு எழுதுமுன் பள்ளியை விட்டு விலகினார்.

போலீஸ் தடையை மீதி கொண்டார். ஆனாலும் இளைஞர் என்பதால் தண்டனை வழங்கப்பட்டது. எச்சரிக்கை மட்டும் செய்யப் பட்டார். இவ்வாறு மிகமிக வயதிலேயே சுதந்திரப் போரில் ஆர்வம் கொண்டவர் இவர்.

பிறகு காந்தியடிகள் என்ற கல்லூரியில் சேர்ந்து கல்வி கற்றார். நான்கு ஆண்டு படித்து மெய்ஞானப் பாடத்தில் முதல் மாணவராகத் தேர்வுப் பெற்றார். 1922இல் 'சாஸ்திரி' பட்டம் பெற்றார். 1920இல் லஜபதிராயின் மக்கள் சேவா சங்கத்தில் உறுப்பினராகி சேவை புரிந்தார். நல்ல வேலை தேடாது 00 ரூபாய் ஊதியத்தில் இச்சங்கத்தில் தொண்டராக பணி செய்தார்.

தீண்டாமை ஒழிப்பு கல்வி என பல துறையில் இவர் பணி சிறந்தது. நேருவின் பாராட்டும்; மோதிலால் நேருவின் பாராட்டும் கிடைத்தது. நேரு குடும்பத்துடன் நெருக்கமான உறவு இவருக்கு ஏற்பட்டது. 1927இல் வரதட்சணை ஏதுமின்றி லலிதாதேவி என்ற அம்மையாரை மிக எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார்.

1920இல் காங்கிரஸ் கூட்டம், காந்தியடிகள் அறப்போர். உப்பு சத்தியாகிரகம், சட்டம் மறுப்பு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் என பல்வேறு சுதந்திரப் போரிலும் சாஸ்திரி பங்கு கொண்டார். அலகாபாத்தில் போலீஸ் தடையை மீறி சொற்பொழிவாற்றினார். இதற்காக கைது செய்யப்பட்டு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பெற்றார். இதுபோல் பல்வேறு போராட்டம் மூலம் ஏறத்தாழ 10 ஆண்டுகள் நாட்டுக்காக சிறைத் தண்டனை அனுபவித்தார் இவர். சிறைக்காலத்தில் நேருவுடன் பழகும் வாய்ப்பும் பல்வேறு நூல்களை கற்கும் வாய்ப்பும் பெற்றார். 1922 முதல் 1932 முடிய இவர் செய்த சேவைகள் மகத்தானவை.

உத்திரபிரதேச சட்டசபைத் தேர்தலில் வென்று, அமைச்சர் பதவி வகித்தார். 1952இல் தேர்தலில் காங்கிரஸ் 'கட்சி வெற்றிக்கு பாடுபட்டார். நேருவின் அமைச்சரவை யில் ரயில்வே அமைச்சராகப் பணி செய்தார். 1956இல் மகபூர் நகர் ரயில் விபத்திற்காக பதவியை துறக்க முன் வந்தார். நேரு அதனை ஏற்கவில்லை.

பிறகு 1957ஆம் ஆண்டு தேர்தலில் வென்று, செய்தி, போக்குவரத்து அமைச்சர், பிறகு விவசாயம் கைத்தொழில் அமைச்சர் என பல்வேறு துறையில் பணி செய்தார். 1962இல் தேர்தலில் வென்று, உள்துறை அமைச்சராக பதவியேற்றார் ஜவஹர்லால் நேரு மறைவிற்கு பின் இந்தியாவின் பிரதமராக 1964இல் பதவியேற்றார். சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதமர் இவரே. இங்கிலாந்து, ரஷ்யா என பல நாடுகளுக்கு சென்றவர். இந்நாளில் பாகிஸ்தான் படையெடுப்பை சந்திக்க நேர்ந்தது. பாகிஸ்தான் - இந்தியா - தாஷ்கண்ட் ஒப்பந்தம் மூலமாக ரஷ்யா சென்ற போது நெஞ்சுவலியால் 1966ஆம் ஆண்டு ஜனவரியில் காலமானார். இந்திய வரலாற்றில் இவர் பெயர் என்றும். அழியாது.