அக்பர், பீர்பாலுக்கு தரும் மதிப்பையும் மரியாதையுட கண்டு அரசவையில் இருந்த சிலருக்கு பொறாமையுட எரிச்சலையும் ஏற்படுத்தியது. பீர்பாலை எப்படியாவது அவரது பதவியிலிருந்து நீக்கி அவமானப்படுத் வேண்டும் என்று நினைத்து அதற்கான முயற்சியில் தீவிரமாய் இறங்கினார்கள். பீர்பாலால் பதில் அளிக்க முடியாத சில கேள்விகளை கேட்டு திணற அடிக்க வேண்டும் என்று நினைத்து சிக்கலான கேள்விகளை யோசித்து வைத்துக் கொண்டு மன்னரிட்ட சென்றார்கள். அரசே, நாங்கள் கேட்கும் மூன்று கேள்விகளுக்கு பீர்பா பதில் சொல்கிறாரா பார்ப்போம். அவர் பதில் சொல்லிவிட்டா அவர் தான் சிறந்த அறிஞர் என்பதை ஒத்துக் கொள்கிறோம் அவருக்கு பதில் சொல்லத் தெரியாவிட்டால் அவர் தோற்றதாக கருதி அவரை நாடு கடத்தி விட வேண்டும் என்று கூறிட பொறாமைக்காரர்களின் கூற்றை அக்பரும் ஏற்றுக் கொண்டார். உலகத்தின் நடுமையம் எது என்று முதல் கேள்விடை கேட்டார்கள். கொண்டிருந்த அதற்கு பீர்பால், தன் பக்கத்தில் நின்று காவலாளியின் கையிலிருந்த ஈட்டியையும் பிடுங்கி, இந்த ஈட்டியின் முனைதான் பூமியின் நடுப்பாகம் சந்தேகமிருந்தால், நீங்களே வானத்திலிருந்து பூமியை அளந்து பார்த்துக் கொள்ளுங்கள் என்றார் பீர்பால். இதை சற்றும் எதிர்பார்க்காத பொறாமைக்காரர்கள் அடுத்த கேள்வியாக, வானத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதை மிகச் சரியாக உங்களால் கூற முடியுமா பீர்பால்? என்றதும், பீர்பால் காவலாளியைக் கூப்பிட்டு ஆட்டுக்குட்டி ஒன்றை கொண்டு வரச்சொன்னார். குட்டியோடு வந்தான். காவலாளி ஆட்டுக் 'நண்பர்களே, இந்த ஆட்டுக்குட்டியின் உடலில் எத்தனை ரோமங்கள் இருக்கிறது என்பதை நீங்கள் எண்ணி பார்த்து சொல்லுங்கள். அந்த எண்ணிக்கையும் வானத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் ஒன்றுதான்!' என்றார் பீர்பால். தங்களது நம்பிக்கைகள் தகர்ந்து போய்விடுமோ என்ற பயம் வந்து விட்டது பொறாமை கொண்ட நண்பர்களுக்கு. அடுத்த கேள்வியையும் கேட்டு விடுவது என்று தீர்மானித்து 'பீர்பால் நம்நாட்டில் எத்தனை ஆண்கள் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் என்பதை உங்களால் கூறமுடியுமா? என்றனர். 'நண்பர்களே! எத்தனை ஆண்கள், பெண்கள் இருக்கிறார்கள் என்பதை உங்களிடம் கூறுவதற்கு முன் பல குழந்தைகள் பிறந்திருக்கும். அப்படி பார்க்கும் போது நான் கூறும் எண்ணிக்கை தப்பானதாகி விடும்! ஆகவே நீங்கள் நம்நாட்டில் உள்ள ஆண்களையும் பெண்களையும் கொன்று விடுங்கள்! பின்பு இறந்தவர்களில் ஆண், பெண் எத்தனை பேர் என்பதை கணக்கிட்டு கூறுகிறேன்' என்று அமைதியாகக் கூறினார் பீர்பால். பொறாமைக்காரர்கள் தனது தோல்வியை ஒத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு சென்றார்கள்.