கடையெழு வள்ளல்கள் பேகன் || Kadaiyelu vallalkal pekan history in tamil


இன்று மதுரை மாவட்டத்தில் செந்தமிழ் முருகன். வீற்றிருக்கும் தென்பழனியாய் விளங்குவது, பொதினி. அதற்கு வையாவி, ஆவிநன்குடி என்ற பெயர்களும் உண்டு. மலையகத்துப் பொதினியைத் தலைநகராகக் கொண்டு வெகுகாலத்திற்கு முன் கடையெழு வள்ளல்களில் ஒருவன் என்று போற்றப்படும் வையாவிக் கோப்பெரும் பேகன் என்ற குறுநில மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். பேகன் ஆவியர் குடியில் தோன்றியவன். தமிழ் மொழியிடத்துத் தீராத பற்றுக் கொண்டவன். அனைத்து உயிர்களிடத்தும் அன்பும் அருளும் உடையவன். அழகும், வீரமும், பேராண்மையும், அறிவும் பெற்று பெரும் புகழுடன் ஆட்சியைச் செம்மையாகப் புரிந்து வந்தான். புலவர் பெருமக்களைப் போற்றி ஆதரிப்பவன். போரை வெறுப்பவன்; அமைதியை விரும்புபவன். கருணையே வடிவானவன். 'இல்லை' என்று வந்தார்க்கு அள்ளியள்ளி வழங்கும் வள்ளல். பழம் பெரும் தண்டமிழ்ப் புலவர்களான கபிலர், பரணர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் ஆகிய சான்றோர்களால் பாராட்டப் பெற்றவன் பேகன். அவனிடம் வலிமைமிக்க யானைப் படையும், குதிரைப் படையும் உண்டு.

எல்லாச் சிறப்புகளும் பெற்றுத் திகழ்ந்த மன்னன் பேசுலுக்கு மலைவளம் காண்பதில் பேரார்வம் உண்டு. ஒரு சமயம் தனது பரிவாரங்கள் புடைசூழ எழில் கொஞ்சும் மலைவளம் காணச் சென்றிருந்தான்.

அப்போது குளிர்காலம். வானம் மப்பும் மந்தாரமுமாகத் திகழ்ந்தது. மேகக் கூட்டம் கறுத்துத் திரண்டு காட்சி யளித்தது. குளிர் காற்று வீசியது. ஓரிடத்தில் மயிலொன்று மிகுந்த களிப்புடன் அகவியது. அழகு மிளிரும் தனது தோகைகளை விரித்து ஆடியது. மயில் தோகை விரித்தாடும் எழிற் காட்சியை மன்னன் பேகன் கண்டான். வியப்பும் பேருவகையும் அடைந்தான்.மேகம் கனிந்த காட்சி கண்டு மகிழ்ச்சியில் ஆடுகிறது என்பதை அவன் அறியவில்லை 'எவ்வளவு அழகான மயில்! என்னைப் போன்றே இதுவும் குளிர் தாங்காமல் நடுங்குகிறது போலும் என்று எண்ணி மன்னன் பேகன் மனம் நெகிழ்ந்தான். 'வாய் பேச முடியாத இந்த ஐந்தறிவு உயிர் படும் துன்பத்தைப் பகுத்தறிவு கொண்ட நான் பார்த்துக் கொண்டு வாளாவிருப்பது நெறியோ?' என்று எண்ணினான்.

அந்த மயில்மீது பேகன் பேரிரக்கம் கொண்டான். மிகுந்த பரிவோடு அந்த மயிலின் அருகில் சென்றான். தனது மேனியில் போர்த்தியிருந்த உயர்ந்த வேலைப்பாடுகளுடன் கூடிய போர்வையை எடுத்தான். அதனை அந்த மயிலின் மீது போர்த்தினான். இனி அது குளிரால் வருந்தாது என்று கருதினான். மனநிறைவுடன் தனது குளிரையும் பொருட் படுத்தாது அரண்மனைக்கு வந்து சேர்ந்தான்.

பேகன் தனது விலையுயர்ந்த போர்வையைப் போர்த் திய பேதைமைச் செயலுடைய ஈகைச் செய்தி அவனுடன் மலைவளம் காணச் சென்றிருந்த மெய்க்காப்பாளன் மூலம் நாடெங்கும் பரவியது. இதனைக் கேட்ட அனைவரும் மிகவும் வியப்படைந்தனர். புலவர் பெருமக்களின் செவிகளிலும் இச்செய்தி விழுந்து மன்னனின் கருணையுள்ளத்தைப் போற்றினர்.
 
பெரும் புகழ் பெற்று விளங்கிய பரணர் என்ற புலவரும் மன்னன் செய்த செயலைக் கேள்வியுற்றார். கடைச் சங்க காலப் புலவரான பரணர் கற்பனை வளம் மிகுந்தவர். சமரச உணர்வு உடையவர். தமிழகமெங்கும் மிகவும் அறிமுகமானவர். சேரன் செங்குட்டுவனைப் பாராட்டிப் பெருமைப்படுத்தியவர். அரசர்களுக்கு அறிவுரை கூறியும், அவர்கள் தவறான வழியில் சென்றால் இடித்துரைத்து நல்வழிப்படுத்தியும் பல பாடல்களைப் பாடியவர்.

மன்னன் பேகன் மயிலுக்குப் போர்வை போர்த்தினான் என்பதை அறிந்த உடனேயே அவனை நேரில் சென்று பாராட்டவேண்டும் என்று மிகவும் விரும்பினார். அதனால், அவனுடைய தலைநகரான பொதினிக்குச் சென்றார். பரணர் வந்துள்ளதைக் கேள்வியுற்ற பேகன், அவரை எதிர்கொண்டு வரவேற்று உபசரித்தான். ஆசனத்தில் அமரச் செய்தான்.

பரணர், பேகனைப் பார்த்து மிகுந்த பெருமிதத்துடன் பேகனுடைய வீரத்தையும் ஈகையையும் பாராட்டும் வகையில், "நீர் வற்றிய குளத்திலும் விளை நிலத்திலும் மழை பெய்கின்றது. ஒன்றுமே விளையாத நிலத்திலும் மழை பெய்கின்றது. குளமும் விளைநிலமும் களர் பயன் பெறுகின்றன. களர் நிலத்தில் பெய்யும் மழை வீணாகின்றது. அதனால், மழைக்குப் பயனுள்ள நிலம், பயனற்ற நிலம் என்ற வேறுபாடு எதுவும் கிடையாது. அதைப்போலவே மன்னன் பேகனும் தகுதி, தகுதி இல்லாமை இவற்றை அறிந்து கொண்டு ஈகை செய்யமாட்டான். தன்னிடம் வந்து இரப்பவர் வல்லார் என்றாலும் இல்லார் என்றாலும் தெரிந்தோர் ஆயினும் தெரியாதவர் ஆயினும், எவராக இருப்பினும் அவர்கள் அனைவருக்கும் சமமாக வாரி வழங்கும் வள்ளல்தன்மை கொண்டவன். இவ்வாறு கொடை தானம் வழங்குவதில் அவன் அறியாமை உடையவனாக இருக்கலாம். ஆனால், போர்க்களத்தில் வீரமும், பேரறிவும், பேரறமும் உணர்ந்த சிறந்த அறிஞன்" என்று பாராட்டினார்.

வியத்தகு ஈரமுடைய கொடை வள்ளலாகிய பேகனுக் குக் கண்ணகி என்னும் கற்புடைய மனைவி இருந்தாள். இவள் பேரழகும் நல்லறப் பண்புகள் நிறைந்தவளாகவும் விளங்கினாள். கணவன் மனமறிந்து நடக்கும் மங்கையர் குலத் திலகமாகத் திகழ்ந்தாள்.

இவ்வாறு எல்லாச் சிறப்புகளும் பெற்று போனும் கண்ணகியும் சிறப்புடன் வாழ்ந்து வரலாயினர். ஆனால், நாளாக ஆக எப்படியோ அவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து மாறுபாடு ஏற்பட்டுவிட்டது. அவர்கள் வாழ்வில் அமைதி குலையலாயிற்று. நாளுக்கு நாள் ஊடல் வளர்ந்து அவர்கள் வாழ்வில் பிளவை ஏற்படுத்திவிட்டது.

பேகன் கண்ணகியைப் பிரிந்து அரண்மனையை விட்டு வெளியேறி நல்லூர் என்னும் ஊரில் தனித்து வாழ்ந்து வரலாயினான். கண்ணகி பொதினியின்கண் அமைந்திருந்த அரண்மனையின் அந்தப்புரத்தில் சோகமே வடிவாக இருக்கலானாள். கணவனின் பிரிவால் அவள் அடைந்த துன்பம் அளவிட இயலாதது. சோகக் கடலில் மூழ்கினாள். கண்ணீர் வடித்தவாறே இருந்தாள்,

அவள் சிந்தும் கண்ணீரால் அவளது மார்பில் ஒளிரும் ஆபரணங்கள் நனைந்தன. கூந்தல் கலைந்து ஒப்பனை யின்றி வாடினாள். அவளது இதழ்கள் புன்னகையை இழந்தன. உண்ணாமல் உறங்காமல் நல்லாடை அணியா மல் ஓயாது அழுதவண்ணம் இருந்தாள். அவளது வதனம் தாமரை பூக்காத தடாகம் போல் பொலிவற்றிருந்தது. பேகனையே நினைந்து நினைந்து நொந்து நூலாகிப் போனாள்.

சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களில் தனித்தன்மை படைத்து விளங்கியவர் கபிலர். பறம்பு மலை ஆண்ட வள்ளல் பாரியின் உயிர்த் தோழர். பாண்டிய நாட்டில் அவதரித்தவர்.

அவர் ஒரு சமயம் வள்ளல் பேகனைக் கண்டு அவன் புகழ் பாடிப் பரிசில் பெறுவதற்காக பொதினியை அடைந்தார். விண்ணைத் தொடும் மலையின் எழில் கண்டு வியந்து பாடினார். பேகனின் அரண்மனையை அடைந்தார். வாயிலின்கண் நின்று கொண்டே கபிலர் தனது வருகையை உள்ளே இருப்போருக்கு உணர்த்தினார்.

கபிலர் பெருமான் வந்துள்ளார் என்பதைக் கேள்வியுற்ற கண்ணகி அங்கு விரைந்து வந்தாள். புலவர் அவளை உற்று நோக்கினார். அவரைக் கண்ணுற்ற கண்ணகி விம்மி விம்மி அழத் தொடங்கிவிட்டாள். அவள் கண்ணீர் சிந்துவதைக் கண்டு கபிலர் கலக்கம் அடைந்தார்.ரும்

"பெண்ணரசியே! தாங்கள் துயருறக் காரணம் யாது?" எனக் கபிலர் பரிவுடன் கேட்டார். அதற்குக் கண்ணகி, 'புலவர் பெருமானே! உங்கள் அன்பிற்குரிய மன்னர் என்னைவிட்டுப் பிரிந்து நல்லூரில் உள்ளார்" என்று மிகுந்த வேதனையுடன் கூறினாள்.

அவள் கூறியவுடன் பேகனிடம் வெறுப்பும் கண்ணகி யிடம் பரிவும் கொண்டார். கண்ணகியின் கண்ணீரைத் துடைக்க உறுதிகொண்டார். அவருக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. உடனே நல்லூருக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே பேகனைக் கண்டார். தாம் கண்ட காட்சிகளை விளக்கமாக எடுத்துரைத்தார். அதன் பின்னர் 'கருணையே வடிவாக விளங்கிய பேகனே! உன் மனைவி கண்ணகி துன்பமே வடிவாக இருக்கக் கண்டு என் உள்ளம் மிகுந்த துயரத்தில் உள்ளது. உன் ஆட்சியின் கீழ் வாழும் மக்கள் ஒரு குறையும் இன்றி மகிழ்ந்து வாழ்ந்து வருவதைக் கண்டேன். ஆனால், ஒழுக்கத்தையே உயிரினும் மேலாகக் கருதும் உத்தமியான உன் மனைவி மட்டுமே மாளாத் துயரில் உழல்வது மாண்புடையதாகாது. அவள் உன்னையே நினைந்து உருகிக் கண்ணீர் அடைந்தார். விண்ணைத் தொடும் மலையின் எழில் கண்டு வியந்து பாடினார். பேகனின் அரண்மனையை அடைந்தார். வாயிலின்கண் நின்று கொண்டே கபிலர் தனது வருகையை உள்ளே இருப்போருக்கு உணர்த்தினார்.  கபிலர் பெருமான் வந்துள்ளார் என்பதைக் கேள்வியுற்ற கண்ணகி அங்கு விரைந்து வந்தாள். புலவர் அவளை உற்று நோக்கினார். அவரைக் கண்ணுற்ற கண்ணகி விம்மி விம்மி அழத் தொடங்கிவிட்டாள். அவள் கண்ணீர் சிந்துவதைக் கண்டு கபிலர் கலக்கம் அடைந்தார்.ரும்  "பெண்ணரசியே! தாங்கள் துயருறக் காரணம் யாது?" எனக் கபிலர் பரிவுடன் கேட்டார். அதற்குக் கண்ணகி, 'புலவர் பெருமானே! உங்கள் அன்பிற்குரிய மன்னர் என்னைவிட்டுப் பிரிந்து நல்லூரில் உள்ளார்" என்று மிகுந்த வேதனையுடன் கூறினாள்.  அவள் கூறியவுடன் பேகனிடம் வெறுப்பும் கண்ணகி யிடம் பரிவும் கொண்டார். கண்ணகியின் கண்ணீரைத் துடைக்க உறுதிகொண்டார். அவருக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. உடனே நல்லூருக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே பேகனைக் கண்டார். தாம் கண்ட காட்சிகளை விளக்கமாக எடுத்துரைத்தார். அதன் பின்னர் 'கருணையே வடிவாக விளங்கிய பேகனே! உன் மனைவி கண்ணகி துன்பமே வடிவாக இருக்கக் கண்டு என் உள்ளம் மிகுந்த துயரத்தில் உள்ளது. உன் ஆட்சியின் கீழ் வாழும் மக்கள் ஒரு குறையும் இன்றி மகிழ்ந்து வாழ்ந்து வருவதைக் கண்டேன். ஆனால், அவள் உன்னையே நினைந்து உருகிக் நிற்க, நீ மட்டும் இங்கே மகிழ்ந்திருத்தல் உனது பண்பிற்கும்
புகழிற்கும் இழுக்கைத் தருவதன்றோ? எல்லோருக்கும்இரங்கும் ஏந்தலே, உனக்காகவே வாழும் கண்ணகிபால் துடைத்து சென்று அவள் கண்ணீர் அவளுடன் வாழ்வாயாக! அதுவே அன்புடையார் செயலாகும்" என்று மனம் நெகிழ்ந்து கபிலர் கூறினார்.

மற்றொரு நாள் புலவர் பரணரும் பேகனைக் காண பொதினி மலைக்குச் சென்றார். கண்ணகி நிலையை அறிந்தார். அவளது நிலை புலவரின் உள்ளத்தை உலுக்கி விட்டது.

பரணர் நேராக நல்லூர் சென்று பேகனைக் கண்டார். அவர், "பேக, வாடை கண்டு வாடாத மயில் கண்டு நீ அது வாடி வருந்துகிறது என்று மனமுருகி, அதன் வாட்டம் தீர உனது போர்வையை அதற்குப் போர்த்தி அருள் புரிந்தவன். அந்த ஒப்பரிய செயலை அறிந்ததும் ஓடோடி உனது அவைக்கு வந்து உன்னை அன்று மனமார வாழ்த்தி மகிழ்ந்தேன். அந்த அருட்குணம் இப்போது உன்னிடம் இல்லை என்றறியும்போது எனது நெஞ்சம் வேதனையால் துடிக்கிறது'' என்றார். கண்ணகியைப் பிரிந்து வாழ்வதை பல எடுத்துக்காட்டுகளுடன் இடித்துரைத்தார். கண்ணகி யுடன் பேகன் வாழ்வதே, தான் வேண்டும் பரிசு என்றும் கூறினார்.

இதேபோல் பெருங்குன்றூர் கிழார் என்னும் பெரும் புலவர் பெருமானும் பேகன் மனைவியைப் பிரிந்து வாழ்வதைக் கேள்வியுற்றார். பேகனிடம் சென்றார். அவன் அளித்த பரிசை ஏற்க மறுத்தார். மனைவியோடு சேர்ந்து வாழ்வதே மாண்பு என்பதை வலியுறுத்தினார்.

இவ்வாறு கபிலரும், பரணரும், பெருங்குன்றூர் கிழாரும் பேகனுக்கு அறிவுரை கூறிய காலகட்டத்தில் அரிசில் கிழார் என்னும் புலவர் பெருமகனும் அங்கு வந்து சேர்ந்தார். அவரும் பேகனை நல்வழிப்படுத்தும் அறிவுரை பகன்றார். அவருக்கு பேகன் அளிக்க வந்த பரிசிலை ஏற்க மறுத்தார்.

நான்கு மாபெரும் புலவர் பெருமக்களின் அறிவுரை களைக் கேட்ட பேகன் மனம் திருந்தினான். தனது தவறை உணர்ந்து வருந்தினான். நல்லூரை விட்டுப் புறப்பட்டான். பொதினி நகர் அரண்மனையை அடைந்தான்.

பேகன், கண்ணகி ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்த காட்சி கண்டு புலவர் பெருமக்கள் மனம் மகிழ்ந்தனர். அதன்பின் பேகன் அளித்த பரிசில்களைப் பெற்றுக் கொண்டனர். பேகன் மகிழ்ச்சியுடன் மீண்டும் அறவழியில் ஆட்சி புரியலானான்.