Vallal Valvil Ori Life History




 மேற்குத் தொடர்ச்சி மலையில் சேலம் மாவட்டம் சேந்தமங்கலம் அருகில் உள்ளது கொல்லி மலை. இயற்கை வளம் நிறைந்தது. இம்மலையின்கண் நறுமணம் மிக்க சந்தன மரங்களும், சோலைகளும், கனி கொடுக்கும் மரங்களும், வற்றாத எழில் பொங்கும் நீர்ச்சுனைகளும் அருவிகளும் உண்டு.

கொல்லி மலையின் மேற்குப்புறம் பாவை ஒன்று உண்டு. தெய்வங்களால் ஆக்கப்பட்ட அழகுமிக்க அது கொல்லிப் பாவை என்று அழைக்கப்படுகிறது. தானாக இயங்கும் ஆற்றல் பெற்றது. எது எதிர்த்தாலும் அதன் இயல்பு மாறாது.

இம்மலை வாழ் மக்களின் முக்கிய தொழில்கள் பயிர்த் தொழில், வேட்டையாடுதல் ஆகியவையாகும். வனப்பு மிக்க கொல்லி மலையையும் அதனைச் சுற்றியுள்ள பகுதியையும் கொண்ட கொல்லிமலை நாட்டை ஒரு காலத்தில் வல்வில் ஓரி என்ற மன்னன் ஆண்டு வந்தான். வரையாது வாரி வழங்கும் வள்ளல். பல போர்களில் வெற்றி பெற்ற மாவீரன். இசையில் ஈடுபாடு உடையவன். மழவர் என்னும் வீரர்கள் அவனிடம் இருந்தனர்.

புலவர் பெருமக்கள் பலரால் போற்றப்படுபவன். அவனுக்கு ஆதன் ஓரி என்ற பெயரும் உண்டு. தன்னிடம் வரும் புலவர், பொருநர், பாணர், கூத்தர் போன்றோருக்கு குதிரை பூட்டிய தேரும், யானைகளும், பொன்னும் பொருளும் வாரி வழங்குவான்.

ஒருநாள் ஓரி வேட்டையாடச் சென்றிருந்தான். அப்போது பெரும்புலவர் வன்பரணர் தனது பாணர் கூட்டத்தவரோடு வந்து அவ்விடத்தில் தங்கியிருந்தார். அப்போது புலியொன்று ஒரு யானையை வீழ்த்த சமயம் பார்த்துக் கொண்டிருந்தது. இக்காட்சியை ஓரி கண்டான். யானையைக் குறி வைத்து அம்பைத் தொடுத்தான்.

அந்த அம்பு யானையை வீழ்த்தி விட்டு புலியையும் கொன்றது. அத்துடன் அந்த அம்பு ஊடுருவிச் சென்று புள்ளிமானை வீழ்த்தி, அடுத்து நின்ற காட்டுப் பன்றியை யும் வீழ்த்தியபின் ஒரு புற்றில் நுழைந்தது. அப்புற்றினுள் முடங்கியிருந்த முள்ளம் பன்றியின் உடலில் தைத்து அதனையும் வீழ்த்தியது.

இந்த விந்தைக் காட்சியை வன்பரணரும் அவருடன் வந்தவர்களும் கண்டு பெருவியப்பு அடைந்தனர். ஒரு அம்பு இத்தனை விலங்குகளையும் ஒருசேர வீழ்த்திய கூரிய அம்புடையவன் யாராக இருக்கக் கூடும், வேடனுமல்ல. அவனது தோற்றமோ செல்வச் செழிப்பு உடையவனாகக் காட்டுகிறது. கொல்லிமலை மன்னன் ஓரியோ என்று வன்பரணர் எண்ணினார். உடனே, தன்னுடன் வந்த பாணர்களிடம் "நான் இசைப்பாடல் ஒன்று பாடுகிறேன். இசைக் கருவிகளை இசையுங்கள்' என்று கூறினார். ஓரியின் பெயரும் இடம் பெற்றிருந்த ஒரு பாடலைப் பாடினார். தன் பெயர் இடம் பெற்றதைக் கேட்ட ஓரி மிகவும் நாணமுற்றான். "நாடெங்கும் சுற்றியுள்ளோம். ஆயினும் இத்தகைய வில்லாளனைக் கண்டதுமில்லை; கேள்வியுற்றதும் இல்லை' என்று அப்பாடலில் புகழ்ந்துரைத்தார் வன் பரணர். மேலும் அவர் புகழாவண்ணம் அங்கு வந்த ஓரி. அவர்களுக்கு ஊன் உணவை பொருட்களையும் வழங்கினான். அளித்தான். பல

அதனைப் பெற்ற புலவரும் பாணரும் ஓரியின் ஈகைத்தன்மையை வெகுவாகப் பாராட்டினர்.

ஓரி சிறப்புற்று விளங்கிய காலகட்டத்தில் சேர மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சியின் உதவியுடன் முள்ளூர் நாட்டை ஆண்டு வந்த காரி என்னும் மன்னன் பெரும் படையுடன் கொல்லிமலையைக் கைப்பற்ற எண்ணம் கொண்டு வந்தான். சேரன்,காரி இருவரின் பெரும்படை முன் ஓரியின் சிறுபடை எதிர்த்து நிற்க முடியாத நிலை. அதனால் படை சிதறியோடியது.

காரி, ஓரியைக் கொன்றான். ஒப்பந்தப்படி கொல்லி மலையைக் கைப்பற்றிய காரி, அந்நாட்டைச் சேர வேந்தனிடம் அளித்தான். ஓரியை இழந்த கொல்லிமலை மக்கள் மிகவும் வேதனை அடைந்தனர்.

வெற்றி பெற்ற காரி வெற்றிக் களிப்புடன் கொல்லி நகர்த் தெரு வழியே நால்வகைப் படைகள் சூழ, பெரும் ஆரவாரத்துடன் உலா வந்தான். அப்போது கொல்லி மலைவாழ் மக்கள் ஓரியின் அருங்குணங்களை எண்ணி காரியை எள்ளி நகையாடினர்.

கபிலர், பரணர்,நல்லூர் நத்தத்தனார், பெருஞ்சித்திரனார் போன்ற புலவர் பெருமக்கள், காரியால் கொல்லப்பட்டுக் களத்தில் உயிர் துறந்த வள்ளல் ஓரியின் சிறப்பினைப் போற்றிப் பல பாடல்கள் பாடி, அவன் புகழை இலக்கியங் களில் நிலை பெறச் செய்தனர்.


ALL YEAR 


Ori is a great archer who is one of the seven archers. Leader of Kollimalai and its dependent country. He will be known as Valvil Ori and Adan Ori. A festival is celebrated annually in the Kollimalai region of Tamil Nadu in honor of Valvil Ori.

GOOGLE NEWS FOLLOWING


YOUTUBE LINK