Biography of Mahamanithar Motilal Nehru Tamil..





காஷ்மீரில் பண்டிதர் ராஜ்கவுல் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தவர். சம்ஸ்க்ருத, பாரசீக மொழிகளில் இவர் பண்டிதர் காஷ்மீருக்கு விஜயம் சென்ற தில்லி பாதுஷா ராஜ்கவுலின் புலமையைக் கண்டு சில கிராமங்களைப் பரிசளித்தார். இதனால் 1716இல் ராஜ்கவுலின் குடும்பம் தில்லிக்கு குடியேறியது. ராஜ்கவுலின் குடும்பம் 'நேரு குடும்பம் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பரம்பரையில் வந்தவர் தான் கங்காதர் நேரு. இவருக்கு மூன்று மகன்கள். நந்தலால், வம்சீதர் மற்றும் மோதிலால். மோதிலால் தான் இப்போது நாம் காணப்போகும் சரிதத்தின் கதாநாயகர், கருவிலிருக்கும் போதே முப்பத்தி நான்கு வயதில் கங்காதர் நேரு காலமாகிவிட்டார்.

டில்லியில் 1861 மே மாதம் 6-ம் தேதி பிறந்த மோதிலாலின் அண்ணனான 'நந்தலால்' ராஜஸ்தானில் உள்ள கேதரீ சமஸ்தானத்தில் திவானாகப் பணியாற்றி பின்பு வக்கீலானார். இவர் வக்கீல் தொழில் செய்தது ஆக்ராவில் வம்சீதர் நேரு எனும் மற்றொரு அண்ணன் அரசின் சட்ட இலாகாவில் தொழில் செய்து வந்தவர். நந்தலால் தான் குடும்பத்துக்குத் தலைவர் போல இருந்து செயல்பட்டவர். மோதிலால் நேருவின் தாயார் ராணி அரபு மொழி கற்றவர். தன்னைப் போலவே மகனையும் கேதரீ மன்னனின் ஆசிரியர் 'காஜி சத்ருவின்' என்பவரிடம் அரபு, பார்சீ மொழிகளைக் கற்க வைத்தார். பன்னிரண்டு வயதில் இந்த இருமொழிகளிலும் தேர்ச்சி பெற்றார் மோதிலால் எம்.ஏ. பட்டத்துக்கு இணையான 'முத்தஹீ' பட்டம் பெற்றிருந்தார் என்பது பெரும் சாதனை.

கான்பூரிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிக்குலேஷன் தேர்ச்சி பெறும்வரைப் படித்தார். பின்பு அலகாபாத் 'மயூர் மத்தியக் கல்லூரியில் சேர்ந்தார். படியில் இருந்த ஆர்வத்தை விட்டு விட்டு முரட்டுத்தனத்தால் மாணவர்களின் தலைவரானார். அலகாபாத்தில் செல்வந்தர் ஒருவர் தனது மனைவி இறந்தவுடன் இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதைக் கண்டித்து மோதிலால் எழுதிய கவிதை வந்தது. கவிதை பிரதிகள் தீக்கிரையாயின. பி.ஏ தேர்வில் முதல்நாள் தேர்வு சரியாக எழுதவில்லை. என மனதில் தோன்றவே அனைத்து தேர்வுக்கும் செல்லாமல் இருந்து விட்டார். ஆனால், அதிக மதிப்பெண்களை அந்தத் தேர்வில் பெற்றிருந்தார் என்பது பின்னர் தான் தெரிந்தது. ஆனாலும் விடுபட்டது விடுபட்டது தான் பி.ஏ. தேர்வுக்கு பின்னர் செல்லவே இல்லை. பின்னர் சட்டம் பயின்று மாகாணத்திலேயே முதலாவதானார். அலகாபாத் உயர்நீதி மன்றம் அவருக்கு கௌரவித்தது. இந்த வெற்றிக்கு அவர் எடுத்துக் கொண்ட காலம் மூன்று மாதம் தான் வியப்பான உண்மை.

ஆனந்த பவனம்:-

 கான்பூரில் 1883-ல் வக்கீல் பயிற்சி பெற்று 1886ல் அலகாபாத்தில் தனது சகோதரர் நந்தலாலுடன் உயர்நீதிமன்ற வழக்கறிஞரானார். தொழில் அவ்வளவு சரியாக நடைபெறவில்லை. மேலும், நேரடியாக தாக்கியது. காலரா நோயினால் நந்தலாலின் மரணம், பின்பு முதல் மனைவியின் மரணம். சில ஆண்டுகளில் முதல் மனைவிக்குப் பிறந்த மகனின் மரணம் என அடுத்தடுத்து பல பெரும் சோதனைகளைக் கண்டார். சோதனைகள் பல வந்தபோதும் தனது தொழிலினைத் தொடர்ந்தார். சொரூபராணி எனும் காஷ்மீர் பெண்ணை மணர்ந்தார். சொரூபராணி மோதிலால் நேரு தம்பதிகளுக்கு 1889-ல் நவம்பர் 14-ம் தேதி பிறந்தவர் தான் ஜவஹர்லால் நேரு. பின்பு மோதிலாலின் தொழில் சிறந்து விளங்கியது. நிறைய பணம் சம்பாதித்தார். அவரது கனவான ஆனந்த பவனம்' எனும் மாளிகையை வாங்கினார். இது நடந்தது 1900 ஆண்டு, 'ஆனந்த பவனம்' என்பது அவர் சூட்டிய பெயர். நவீன வசதிகள் அனைத்தும் உடைய மாளிகை அது. இந்த வீட்டிற்கு குடிபுகும் போது நேருவுக்கு வயது பதினொன்று. இளமையிலேயே செல்வச் செழிப்புடன் துவங்கியது நேருவின் வாழ்க்கை. அதற்குக் காரணம் மோதிலாலின் உழைப்பு.

ஆனந்த பவனத்தைக் காண்போருக்கு மோதிலால் எத்தகைய ஆடம்பர பிரியர் எனத் தெரியவரும் மேலை நாட்டுப் பழக்கவழக்கங்கள் உணவு உண்ணும் முறையில் கூட இருந்தது. சாப்பிடும் போது மது வழங்கப்படும். உடைகள் இங்கிலாந்திலும், பிரான்சிலும் வாங்கப்பட்டவை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 1899, 1900 என இரு ஆண்டுகளில் இருமுறை ஐரோப்பாவுக்குச் சென்று வந்தார். கடல் கடந்து சென்று வந்ததற்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளும்படி ஜாதீய ஆதரவாளர்கள் கூறியதை மோதிலால் ஏற்க மறுத்தார். அதனால் ஜாதியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்.

ஜவஹர்லாலுக்குப் பிறகு இரு பெண் குழந்தைகள் சரூப். இருவரும் பிறந்தனர். ஜவஹர்லாலின் பள்ளிப் படிப்புக்காக மோதிலால் இங்கிலாந்து சென்றார் .
புகழ்பெற்ற பள்ளியான 'ஹாரோ ஆன் தி ஹில் பள்ளியில் 1905-இல் ஜவஹர்லாலைச் சேர்த்தார். பின்பு இந்தியாவுக்கு மீண்டார். தன்னைப் போலவே மகனும் செலவாளியாக இருப்பதில் மோதிலாலுக்கு கவலையில்லை. மகனை ராஜா வீட்டு மகனைப் போல வளர்க்க எண்ணினார். ஆடம் பரமான வாழ்க்கை முறை வாழும்படியும் உல்லாசமாக இருக்கவும் மகனுக்குக் கற்றுத் தந்தார். ஐரோப்பா சென்று வரும்போதெல்லாம் புதிய கண்டுபிடிப்புகளை வாங்குவது அவருக்கு விருப்பம். சைக்கிள் கண்டுபிடித்த போது சைக்கிள், பின்பு பைக், பின்பு 1909-ல் இரண்டு கார்கள். முதன் முதலில் மின்சாரம் மற்றும் 'பிளஷ் அவுட் இன்று பம்பாய் கக்கூஸ் என்று கூறப்படுவது இவையெல்லாம் ஆனந்த பவனில் அவர் வாழ்ந்த ஆடம்பர வாழ்க்கைக்கு அடையாளங்கள்.

குணநலன்கள்:-

 தாஜ்மகாலின் உயரமான கும்பத்தின் மீது சிறுவன் ஜவஹர்லால் நேருவுடன் நின்றபடி காசுகளை வாரி இறைப்பது அவரது வேடிக்கையான விளையாட்டு மூத்த பெண் விஜயலட்சுமி (சரூப்)யின் பெண்ணுடன் இரயிலில் பயணம் செய்யும் போது சில்லரைக் காசுகளை வெளியில் எறிந்து பார்ப்பது இவையெல்லாம் அவரது குணாதிசயங்களாகும்.


பலரக குதிரைகள் கொண்ட அவரது குதிரை லாயம் பல வேலையாட்களைக் கொண்ட அவரது பூங்கா. நீச்சல் குளம், குதிரை சவாரி, கிரிக்கெட், டென்னிஸ் அவருக்கு மிகவும் பிடித்த மல்யுத்தம், தீவிர உடற்பயிற்சி இவையெல்லாம் மோதிலாலின் தனி முத்திரைகள், கோபக்காரர், ஜவஹரிடம் கூட கண்டிப்பானவர். ஆனால் குழந்தைகள் என்றால் உயிர். குழந்தைகள் மீது அவர் கொண்டிருந்த பாசம் அளவிட முடியாதது கோபக்காரர் என்றாலும் இரக்க குணம் மிகுதி.

ஒருமுறை ஏழை பிராமணன் தன் பெண்ணின் கல்யாணத்திற்கு முந்நூறு ரூபாய் கேட்டு வந்தபோது அன்றைய வருமானம் முழுவதும் தந்தார். முழு வருமானம் அன்று எவ்வளவு தெரியுமா? 'ஆயிரத்து முந்நூறு ரூபாய்'

நைனிடாவில் ஓர் அழகான ஏரியில் படகு யாத்திரை செல்ல இந்தியர்களுக்குத் தடை விதித்திருந்தது. ஆங்கில அரசு, துணிவுடன் பயணித்தார் மோதிலால். காலை முதல் மாலை வரை படகு சவாரி. கரை ஏறியவருக்கு ஐம்பது ரூபாய் அபராதம் தொடர்ந்து ஒருவாரம் படகு சவாரியும் அபராதமும் செலுத்தினார். மோதிலால், பின்பு அரசு அபராதத்தை நிறுத்தியது. இது அவரது துணிவுக்கு அடையாளம்.

ரயில் பயணத்தின் போது மோதிலால் ரிசர்வ் செய்திருந்த சீட்டில் சில வெள்ளையர்கள் கதவை தாளிட்ட படி பயணிந்தனர். கதவை உடைத்து உள்ளே புகுந்தார். கதவை உடைத்ததற்கு அபராதமும் செலுத்தினார்.

'நீங்கள் மது அருந்தும் பழக்கமுடையவரா? என்று மகாத்மா கேட்ட போது ஆம் மருத்துவரின் ஆலோசனைப் படி தினமும் ஒரு பெக் சாப்பிடுகிறேன் என்றார். பின்பு ஒருமுறை காங்கிரஸார் ஒவ்வொரு வரும் நூல் நூற்க வேண்டும் எனும் கட்டளையை காந்தி விதித்த போது அதை மறுத்தார். பின்பு மோதிலாலுக்காக மீறுபவர்கள் நாலணா கட்ட வேண்டும் என மாற்று அறிவிப்பு வெளியானது.

காங்கிரஸில்... தனக்குச் சரியெனப்பட்டதை துணிவுடன் செய்பவர். கோபக்காரர் ஆனாலும் குணவான். ஆடம்பர வாழ்க்கை எனினும் பிறருக்கு உதவும் குணம் இவை மோதிலாலின் சிறப்பு. வக்கீல் தொழிலில் ஆழ்ந்த கவனம் செலுத்தி வந்த மோதிலால் காங்கிரஸின் அரசியல் நடவடிக்கைகளில் மேம்போக்காகக் கலந்து கொள்வதுண்டு. காங்கிரஸில் மிதவாதிகள், தீவிரவாதிகள் சண்டை நடக்கும் காலத்தில் தான் அவருக்கு அரசியல் மேல் ஆர்வம் திரும்பியது. முரட்டு குணம் கொண்ட மோதிலால் மிதவாதிகளை உண்மை.

1888-ல் 'ஜார்ஜ் யூல் என்பவரது தலைமையில் காங்கிரஸ் மகாசபையின் நாலாவது மாநாட்டில் கலந்து கொண்ட 1400 பிரதிநதிகளில் "பண்டித மோதிலால் ஹிந்து பிராமணர், ஹைக்கோர்ட் வக்கீல் வடமேற்கு பெயரில் மோதிலாலைப் பற்றிய பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு அனைத்து காங்கிரஸ் மாநாட்டிலும் கலந்து கொண்டார். மகாசபைக் கூட்டம் நடந்தது அலகாபாத்தில். 1892-ல் நடந்த கூட்டத்தில் பதினான்கு வயது ஜவஹர்லால் நேருவும் மோதிலாலுடன் கலந்து கொண்டார். மோதிலால் ஜவஹர்லாலை குறிப்பிடத்தக்கது.

1907-ல் அலகாபாத் மாநாட்டிற்கு மோதிலால் தலைமை தாங்கினார். அரசியல் தீவிரவாதிகளின் கொள்கையை வெகுவாக சாடியது அவரது தலைமை உரை. மாகாண கவர்னர் ஆலோசனைக் (கவுன்சில்) உறுப்பினரானார். அதே வருடம் நண்பர்களுடன் சேர்ந்து 'லீடர்' என்ற பத்திரிக்கையைத் ஆங்கில அரசின் நெருக்கடி பத்திரிக்கையின் பக்கம் திரும்பிய போது போராடினார். ஆனால் காலப்போக்கில் வேறுபாடு காரணமாக 'லீடர்' பத்திரிக்கையிலிருந்து விலகினார். அலகாபாத் நகராட்சிக் குழு உறுப்பினர். சமிதி உதவித் தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், ஐக்கிய மாகாண காங்கிரஸ் தலைவர் இப்படி பல பதவிகளில் இருந்த அரசியலை தொழிலில் தான் அவரது ஆர்வம் அதிகம். தான் முதலிடம்.
படிப்பை முடித்துவிட்டு ஜவஹர்லால் தாயகம் திரும்பும் நேரம் மோதிலாலுக்கு வயது ஐம்பத்தொன்று. முப்பத்தைந்து வருட கடின உழைப்பு. பாரிஸ்டராகத் திரும்பும் மகளிடம் தொழிலை ஒப்படைத்து விட்டு இனி ஓய்வு எடுக்கப் போகிறேன் என்று எல்லோரிடமும் கூறுவார். நாளை நடப்பதை யார் அறிவார் என்பது மோதிலாலின் வாழ்வில் உண்மை.

1912 ஆகஸ்டில் ஜவஹர்லால் வீடு திரும்பினார். எட்டு ஆண்டு பிரிவுக்குப் பிறகு மகன் வந்துவிட்டான். கொள்ளை மகிழ்ச்சி தந்தையோடு அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு தொழிலைத் தொடங்கினார் ஜவஹர்லால் நேரு. முதல் வழக்கிற்கு ஐநூறு ரூபாய் கிடைத்தது தன்னை விட பல மடங்கு மகன் சம்பாதித்தில் மோதிலாலுக்கு சந்தோஷம். மகனுக்கு திருமணம் செய்ய நினைத்தார். டில்லி கவுல் குடும்பத்தைச் சேர்ந்த கமலா என்ற பெண்ணை மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். பல நாட்டு விருந்தினர்கள் வந்தனர். அரசனின் பட்டாபிஷேகம் போல திருமணம் நடந்தது. 1917ல் பேத்தி இந்திரா பிறந்தாள். பேத்தியோடு கொஞ்சுவதில் நேரம் சென்றது. இதற்கிடையில் 1914-ல் முதல் உலகப் போரின் போது பிரிட்டனுக்கு உதவிபுரிய இந்திய தற்காப்புப் படை ஒன்றை நிறுத்தினார். வேறு பலவிதங்களிலும் அரசுக்கு உதவினார்.

திருப்புமுனை:- 

முதல் உலகப் போரினால் நாட்டில் அமைதி குறைந்தது. அப்பொழுது தான் அன்னிபெசன்ட் அம்மையாரின் சுய ஆட்சி' அதாவது ஹோம் ரூல் கிளர்ச்சி மக்களிடையே வரவேற்றைப் பெற்றது. மோதிலாலை ஹோம் ரூலில் சேரும்படி அன்னிபெசண்ட் வரவேற்றார். ஆனால், மோதிலால் சேரவில்லை. 1917-ல் சென்னை அரசாங்கம் அன்னிபெசன்ட்டை கைது செய்தவுடன் மோதிலாலின் மனம் மாறியது ஹோம் ரூலில் மோதிலால் இணைந்தார் பணியாற்றினார். அலகாபாத்தில்துவங்கப் பெற்ற ஹோம் ரூல்லீ கின் கிளையின் தலைவரானார். அலகாபாத்தில் ஹோம் ரூலின் வளர்ச்சி மோதிலாலையே சாரும். 'ஹோம் ரூலின் பிரிகேடியர்' என 'பயனீயர்' ஆங்கில பத்திரிக்கை மோதிலாவை வர்ணிக்குமளவு இருந்தது அவரது பணி.

1918-ல் பிப்ரவரி 15-ம் தேதி 'இண்டிபெண்டண்ட்' எனும் பத்திரிக்கையைத் துவக்கினார். மோதிலால். இதன் ஆசிரியராக இருந்தவர் 'ஸையத் ஹசைன்' என்பவர். பஞ்சாப்பில் ராணுவ ஆட்சி அமலில் இருந்த போது 'இண்டிபெண்டெண்ட் இதழின் தலையங்கம் கடுமையாக இருந்ததாகக் கூறி பஞ்சாபிலும், பர்மாவிலும் இதழின் பிரதிகள் அரசால் கைப்பற்றப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் மோதிலால் தீவிரவாத சுதந்திரப் போராளிகள் பக்ம் இருந்தார். தாகூர், அன்னிபெசண்ட், சேலம் விஜயராகவாச்சாரியார். ஸி.ஆர்.தாஸ், சரோஜினி நாயுடு போன்றோர் பத்திரிக்கைக்கு உதவியவர்கள் மூன்று ஆண்டுக்கு மேல் பத்திரிக்கை நடத்த முடியவில்லை. அரசு அச்சகத்தை முடக்கியது. பின்பு கையெழுத்துப் பிரதியாக வெளியாகி அதன் பின்பும் நின்றது ஒரு சோக வரலாறு தான்.

முதல் உலகப் போரில் சக்திக்கு மீறி உதவி செய்த இந்தியர்களுக்கு ஆங்கிலேயர்கள் காட்டிய நன்றிக்கடன் ரௌலட் மசோதா' வை சட்டமாக்கும் திட்டம் எந்த விசாரணையுமின்றி சந்தேகத்தின் அடிப்படையில் சிறை தள்ள உதவும் இந்த மசோதாவை சட்டமாக்கியது ஆங்கில அரசு. மகாத்மா காந்தி போன்றவர்கள் உலகப் போரில் ஆங்கிலேயர்களுக்குச் செய்த உதவிக்குக் கிடைத்த பரிசு இதுதான் எவ்வளவோ போராடியும் மசோதா சட்டமாவதை யாரும் தடுக்க முடியவில்லை.

மகன் தந்த மாற்றம்:- '

சத்தியாகிரகம்' எனும் ஆயுதத்தை காந்தி கையிலெடுத்தார். மும்பையில் சத்தியாகிரக சமிதி அமைக்கப்பட்டது. 1919-ல் ரௌலட் சட்டத்தை நிராகரிக்கும் பத்திரித்தை மகாத்மா வெளியிட மக்கள் அதில் கையொப்பம் இட்டனர். மகாத்மா நாடெங்கும் பிரசாரம் செய்யத் துவங்கினார். பொதுக்கூட்டம், ஊர்வலம் என பெரிதானது. ஜவஹர்லால் நேருவை தேசபக்தி பற்றியது.

சட்டத்துக்கு உட்பட்டு போராடி வந்தவர்கள் சட்டத்தை மீறி துணிந்தனர். மிதவாதிகளின் போக்கு மாறியது. தனது மகன் காந்தியின் தலைமையில் சட்ட மீறல் செய்யப் போகிறானா? பெரும் அதிர்ச்சி அடைந்தார். மோதிலால் சிறைவாசம் தனது மகனால் தாங்க முடியுமா? பணியாட்கள் பலர். மாடமாளிகை வாசம், இதையெல்லாம் அனுபவித்த மகனது கடுமையான சிறை வாழ்க்கையை எப்படித் தாங்கும். இவையெல்லாம் ஒருபுறம் என்றாலும் மகனை விட்டுப்பிரிதல் என்னும் கொடுமையை எப்படி மோதிலால் தாங்குவார். 'உன்னை விட்டு பிரிதலை விட காட்டுவாசம் என்ன கொடுமையானதா?' என்று கேட்ட சீதையின் நிலை தான் மோதிலாலின் நிலை. மகனை தடுத்தால் கேட்பானா? பெற்றோர் தடுக்கத் தடுக்க அதில் இன்னும் தீவிரமாக ஈடுபடுவது தானே குழந்தைகளின் வேலை ஜவஹர்லால் மட்டும் அதற்கென்ற விதிவிலக்கா? எனவேதான், மோதிலால் மகாத்மாவை சந்தித்தார். தன்னுடைய நிலையை எடுத்துக்கூறி மகனுக்கு அறிவுரை கூறும்படி கூறினார். ஜவஹரை பொறுமை காக்கும்படி கூறினார் மகாத்மா. இந்த காலகட்டத்தில் தான் காட்டு மிராண்டித்தனத்தின் உச்சகட்டமான ஜாலியன் வாலாபாக் படுகொலையை அரக்கர்கள் நிறைவேற்றினர். 'பஞ்சாப் சிங்கம்' லாலா லஜபத்ராய் அப்போது அமெரிக்காவில் இருந்தார். சிரத்தானந்தர். மோதிலால், மாளவியா போன்றோர் தந்திக்கு என்றே ஆயிரக்கணக்கில் செலவு செய்தனர். மகனால் மோதிலாலின் வாழ்க்கை மாறியது. அலகாபாத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மோதிலால் அரசியல் கைதிகளை விடுதலை செய்து ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு விசாரணை கமிஷன் அமைக்கும் வரை எந்த அரசியல் சீர்திருத்தத்தையும் ஏற்க மாட்டோம் என்று அறிவித்தார். இந்த இரண்டு நிபந்தனைகளும் ஏற்கப்பட்டது. விசாரணையில் கமிட்டி 'ஹண்டர் கமிட்டி' அமைக்கப்பட்டது. அரசாங்க விசாரணையில் உண்மை வராது என்பதால் மோதிலால் தலைமையில் ஒரு விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது, மோதிலாலும், மகாத்மாவும் ஜாலியன் வாலாபாக் படுகொலை விபரங்களைச் சேகரித்தனர். சாட்சிகளை விசாரித்தனர். இந்த விசாரணையில் ஜவஹர்லால் நேருவும் பங்கேற்றார். அவருக்கு வெகுவாக மனமாற்றம் உண்டாக்கியது இந்த நிகழ்ச்சி தான்.

காங்கிரஸ் மற்றும் ஹண்டர் கமிட்டி விசாரணை அறிக்கைகள் வெளியாயின. ஹண்டர் முடிவுகளை மக்கள் ஏற்கவில்லை. ஹண்டர் தெரிவித்த சில விஷயங்களைக் கூட ஆங்கில அரசு நிராகரித்தது. இதில் குற்றம் சாட்டப் பட்ட ‘ஜெனரல் டய'ருக்கு பிரிட்டிஷ் பொதுமக்கள் மூன்று லட்ச ரூபாய் பணமுடிப்பு தந்தனர். காட்டு மிராண்டித் தனத்திற்கு பிரிட்டிஷ் மக்கள் செய்த மரியாதை இது. அநாகரிகத்தின் உச்சக்கட்டம் இது. மன சாட்சியுள்ள மனிதர்கள் எவரும் ஏற்கமுடியாத இந்த அடாத செயலை எப்படி வர்ணிப்பது?

1920 செப்டம்பரில் கூடிய கொல்கத்தா காங்கிரஸ் கூட்டம் ஒத்துழையாமை கிளர்ச்சியை ஏற்றது. அதே ஆண்டு டிசம்பரில் நாகபுரியில் கூடிய காங்கிரஸ் அதை ஏற்றது. கொல்கத்தா காங்கிரஸ் கூட்டத்தில் மோதிலாலும் சித்தரஞ்சன் தாஸம் ஒத்துழையாமையை எதிர்த்தனர். ஆனால், டிசம்பர் நாகபுரி கூட்டத்தில் அவர்களது மனம் மாறியது. பின்பு ஒத்துழையாமை இயக்கத்துக்கு இருவரும் ஆற்றிய சேவையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அந்த அளவு சேவை புரிந்தனர். தேச விடுதலையெனும் பெரும் போருக்கு அந்தப் போராட்டத்துக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் எத்தனை எத்தனை! 

 காந்திப் பாதையில்...

மகனது விடுதலை தாகம் மோதிலாலால் கட்டுப் படுத்த முடியவில்லை. 'காந்தி' எனும் மந்திரக்கயிறு ஜவஹர்லாலை கட்டிப் போட்டு விட்டது. ஜவஹரை மட்டுமா. மோதிலாலையும் தான். மோதிலாலை மட்டுமா. அவரது மனைவியையும் தான். அத்தோடு நிற்கவில்லை. அந்த மந்திரக்கயிறு மோதிலாலின் முழுக்குடும்பத்தையும் கட்டிப் போட்டது. மகனைப் பின்பற்றிச் சென்ற தந்தை தாய். தேசமே 'காந்தி' எனும் மூன்றெழுத்துக்குள் முடங்கியது. அவர் அவதார புருஷரா? இல்லை மந்திரவாதியா? இல்லை. ஆனாலும் 'காந்தி' மூன்றெழுத்தில் தேசத்தில் பலர் சிக்கினர். ஒத்துழையாமை அறிவிக்கப்பட்டவுடன் படிப்பையும், பதவியையும் துறந்தவர் பலர்.இப்படி எல்லோரையும் தன் விருப்பப்படி கட்டிப் போட்டு ஆடவைத்த அந்த காந்தி எனும் மந்திரக் கயிறு மோதிலாலை என்ன செய்தது பார்ப்போமா?

நாகபுரி மாநாட்டிலிருந்த திரும்பும் போதே பல முடிவுகளை மோதிலாலின் மனது செய்திருக்க வேண்டும். புரிசிலும், லண்டனிலும் தேடி எடுத்து ரசித்து அவர் வாங்கிய உடைகள், பொருட்கள் எல்லாவற்றையும் தீ மூட்டி எரித்தார். எரித்தது மோதிலால் ஆசையுடன் சேர்த்த உடையும் பொருளும் மட்டுமல்ல. அவரது ஆடம்பர வாழ்க்கையும் தான். மோதிலால் மட்டுமா? அவரது புதல்வர். மனைவி, பெண் என எல்லோரும் அந்நியத் துணியை எரித்தனர். பொருட்களை எதிர்த்தனர்.

1921-ல் ராமகுட் என்ற ஊரிலிருந்து காந்திக்கு மோதிலால் எழுதிய கடிதம் அவரது மனமாற்றத்தை இங்கு தெளிவாக படம் பிடித்துக்காட்டும். முன்பு மலைப்பிரதேசத்துக்குச் செல்லும் போது இரண்டு உணவு முறைகள் தயாராகும். ஒன்று இந்திய வகை உணவு, மற்றொன்று ஆங்கில வகை உணவு. கூடாரத்தில் உணவு வேட்டைக்கு ரைஃபிள், பிஸ்டல் வெடிமருந்து. துணைக்கு வேட்டைக்காரர்கள் படைவீரர்களைப் போல பணிபுரிய ஆட்கள், வண்டி வண்டியாக உணவுப் பொருட்கள். ஆங்கில வழக்கில் ஆடம்பர வாழ்க்கை, கூடை கூடையாக பழவகைகள், காலை, மாலை தேநீர், இப்படிப்பட்டது பழைய வாழ்க்கை, இப்போதோ வேட்டைக்குப் பதில் உலாவுதல், துப்பாக்கிக்குப் பதில் புத்தகங்கள். பத்திரிக்கைகள், கடிதம் எழுதுதல் மூன்று சிறு பைகளில் வீட்டுக்கு உணவுப்பொருட்கள். பணியாள் ஒருவன் தான், பித்தனை குக்கர் ஒன்று தான் முக்கிய சமையல் பாத்திரம் மதியம் ஒரு வேளை தான் சாப்பாடு. ஓரிரண்டு முட்டை, அரிசி, பருப்பு, காய்கறி, சிலசமயம் பாயசம். இதுதான் இப்போதைய வாழ்க்கை முறை கதராடை தான் உடுத்த, பயன்படுத்த ஆனாலும், முன்னர் இல்லாத ஆனந்தம் இப்போது இருக்கிறது.

காந்தி என்ற ஒல்லியான ஸாத்விக மனிதர் மோதிலாலின் குடும்பத்தை வாழ்க்கை முறையை எப்படி மாற்றிவிட்டார். முதலில் சொரூப ராணிக்கு காந்தி மேல் அவநம்பிக்கை இருந்தது. ஆனால் நாட்பட நாட்பட அவருக்கும் தெளிவு பிறந்தது. ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்து தந்தையும், மகனும் வக்கீல் தொழிலை துறந்தனர். சொரூபராணியோ கள்ளுக்கடை மறியல், அயல்நாட்டுத் துணிகளை கொளுத்தும் போராட்டம் போன்றவற்றில் ஈடுபட எண்ணினாள். இதற்கு காந்தி அனுமதிக்கவில்லை. கணவனிடமும், காந்தியிடமும் அனுமதி பெற்று ஊர்வலங்களில் கலந்து கொண்டு பின்பு பேசவும் துவங்கினார். குடும்பமே போராடப் போனது. வயது வித்தியாசமில்லை. காந்தி எனும் மந்திரக்கயிற்றுக்கு கட்டுண்டது குடும்பம். குடும்ப விஷயம் முதுல் பொது வாழ்க்கை வரை எல்லா முடிவும் காந்தியின் உத்தரவுப்படி