Biography of Vallal Malayaman Thirumudikari.


வளம் கொழிக்கும் முள்ளூர் மலைநாட்டின் மன்னனாக விளங்கியவன் காரி. இந்நாட்டை 'மலையமான்' என்னும் வீர.மரபினர் ஆட்சி புரிந்து வந்தனர். அதனால், அந்நாடு 'மலையமான் நாடு' என்றழைக்கப்பட்டது. பெண்ணையாற்றின் தென்பகுதியில் தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள திருக்கோவலூர் இந்நாட்டின்  தலைநகராகத் திகழ்ந்தது.

மலையமான் நாட்டை காரி என்னும் சிற்றரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவன் மலையமான்' திருமுடிக்காரி', 'கோவற்கே' என்ற பெயர்களாலும் அழைக்கப் பெற்றான்.

ஈகையிலும், வீரத்திலும் சிறந்த சான்றோனாகத் திகழ்ந்தான். பெரும்படை உடையவன். சான்றோர் பலராலும் பாராட்டப் பெற்றவன். இவனிடத்து இவனது பெயரான காரி என்ற பெயராலேயே ஒரு வலிமையும் பொலிவும் கொண்ட குதிரை ஒன்றிருந்தது.

திகழ்ந்தான். பெரும்படை உடையவன். சான்றோர் பலராலும் பாராட்டப் பெற்றவன். இவனிடத்து இவனது பெயரான காரி என்ற பெயராலேயே ஒரு வலிமையும் பொலிவும் கொண்ட குதிரை ஒன்றிருந்தது. கொண்டனர். இதற்குப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டவர் கபிலர் என்னும் புலவர் பெருந்தகை.

சேர, சோழ, பாண்டியர் மூவருக்கும் உற்ற தோழனாகக் காரி இருந்தான். பல வெற்றிகளுக்குக் காரணமாக இருந்து பாராட்டுகள் பெற்றுத் திகழ்ந்தான். எண்ணற்ற அணியும், மணியும், பொன்னும், பொருளும் பரிசாகக் கிடைக்கும். அவற்றைக் கொண்டு தான் மட்டும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று ஒருபோதும் எண்ணமாட்டான்.

அவற்றையெல்லாம் தன்னை நாடி வரும் புலவர். பாணர், கூத்தர் ஆகியோருக்கு வாரி வாரி வழங்குவான்.

சங்க காலப் புலவர்களில் பெரும்புகழ் பெற்றவர் கபிலர் பெருமகன். பறம்பு மலை மன்னன் வள்ளல் வேள் பாரியின் உயிர்த் தோழர். பாண்டிய நாட்டினர். இப்புலவர் திருமகன் காரி மன்னனின் கொடைச் சிறப்பைக் கேள்விப் பட்டார். அவனை நேரில் கண்டு பாடிப் பரிசில் பெற வேண்டும் என்று விருப்பம் கொண்டார்.

மலையமான் நாட்டைக் கபிலர் அடைந்தார். பேரரசர்கள் பலருக்கும் போர்த் துணை சென்று வெற்றி தேடித் தந்த காரியின் வீரச் சிறப்பை நேரில் கண்டார். அவன் தனக்குக் கிடைத்த பெருஞ்செல்வத்தையெல்லாம் வறியோர்க்கு வாரி வழங்கிவிட்டு வெறுங்கையனாய் மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கண்டார். அவனது இல்லறச் சிறப்பையும் கண்டார்.

அதனால் வியந்த கபிலர் அவனது சிறப்பைப் பாடல் களாகப் பாடினார். காரியின் ஈரத்தையும், வீரத்தையும் பலவாறாகப் புகழ்ந்து அப்பாடல்கள் அமைந்திருந்தன.

இவ்வாறு காரியைப் புகழ்ந்து கபிலர் பாடிய காலகட்டத்தில் அவ்வள்ளலைக் காண புலவர்கள் பலரும் வந்தனர். அவர்கள் காரியைப் புகழ்ந்து பாடிய பாடல்களை அவன் கேட்டான். கபிலர் மற்றும் வந்திருந்த புலவர்கள் அனைவருக்கும் வாரி வாரிப் பரிசுகளை வழங்கினான்.

இதனைக் கண்ட கபிலர், 'பெரும்புலவனாகிய எனக்கு என் தகுதியை அறிந்து உரிய மரியாதை தரவில்லையே? பிற புலவர்களைப் போலவே தன்னையும் கருதிவிட்டானே! என்னே இவன் செயல்!' என்றெண்ணி மனம் வருந்தினார்.

தகுதியறிந்து வழங்காத காரியின் செயல் எனக்கு மட்டும் இழிவைத் தருவது அன்று. பெரும் புலவர் அனைவருக்குமே இழிவைத் தருவதாகும். தகுதியறிந்து வழங்க வேண்டும்' என்ற உண்மையை அவனுக்கு உணர்த்த விரும்பினார். உடனே காரியிடம் சென்று, "பெருங்கொடை வள்ளலே! உன்னைப் போன்ற ஈகையாளர்களிடம் எண்ணற்றோர் பரிசில் பெற வருவர். மன விருப்பம் இருந்தால் இல்லை என்று கூறாமல் ஈகை செய்யலாம். இது எல்லோராலும் இயலும். ஆனால் வருகின்றவர்களின் தகுதியறிந்து அதற்கேற்பப் பரிசில் அளிப்பதும் மிகவும் அரிய செயலாகும். அதற்குத் தகுதி அறியும் அறிவும் வேண்டும். அவை உன்னிடம் இருக்கும் என்று நம்பி வந்தேன். உன்னிடம் மன விருப்பம் உள்ளது: தகுதியறியும் தன்மை உன்னிடம் இல்லை. இனிமேலாவது அதனைக் கடைப்பிடிக்க வேண்டும். வரும் அனைவரை யும் பொதுநோக்காக ஒரே மாதிரியாக எண்ணாதே" என்று அறிவுறுத்தினார்.

காரி, கபிலர் பெருமானின் புலமைச் சிறப்பை உணர்த் தான். நயம்படக் கூறும் நாவன்மையை அறிந்தான். குற்றம் கண்ட இடத்தில் துணிவுடன் சுட்டிக்காட்டும் உயர்ந்த உள்ளத்தை அவரிடம் கண்டான். கபிலர் மனம் குளிரப் பரிசுகளை வாரி வழங்கினான். மனம் மகிழ்ந்த கபிலர், காரியின் அரண்மனையில் சில காலம் தங்கியிருந்தார்.

ஒரு நாள் கபிலர் ஒரு ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். வழியில் ஓரிடத்தில் வறியவர் சிலர் உடல் தளர்ந்து, முகம் வாடிச் சோர்ந்து இருந்தனர். கபிலர் அவர்களைக் கண்டார். "ஐயா, தாங்கள் யாவரும் மூகம் வாடியிருக்கக் காரணம் என்ன?" என்று கேட்டார்.

''ஐயா! நாங்கள் வள்ளல் காரியிடம் பரிசு பெற்று எங்கள் வறுமையைப் போக்க வந்தோம். இன்று நல்ல நாள் இல்லை. அதனால் அவனிடம் செல்லாமல் இங்கு தங்கி விட்டோம்" என்றனர். "அன்பர்களே! காரியைப் பார்க்க நல்ல நேரம் பார்க்க வேண்டியதில்லை. அவன் காட்சிக்கு எளியன்; கடுஞ்சொல் கூறாதவன்; அவனை யாரும் எந்த நேரமும் பார்க்கலாம். எதுவும் கேட்கலாம். அவன் எந்த நிலையிலும் கொடுப்பதை நிறுத்தமாட்டான். நீங்கள் உடனே புறப்பட்டுச் செல்லுங்கள்" என்று கூறி கபிலர் அவர்களை அனுப்பி வைத்தார்.

இவ்வாறு கொடையிற் சிறந்து விளங்கிய காரியைப் பற்றிக் கேள்வியுற்ற வட வேந்தர்கள் அவனது முள்ளூர் மலையைக் கைப்பற்ற எண்ணினர். பெரும்படையுடன் வந்து முள்ளூர் மலையை முற்றுகை இட்டனர்.

இதனைக் கேள்வியுற்ற காரி, திருக்கோவலூரிலிருந்து புறப்பட்டு முள்ளுரை அடைந்தான். முற்றுகையிட்ட பகைவருடன் போரிட்ட காரி அப்போரில் வெற்றிவாகை சூடினான். ஒருமுறை சேரன் பெருஞ்சேரல் இரும்பொறைக் காக கொல்லிமலைத் தலைவன் வல்வில் ஓரியைக் கொல்ல நேர்ந்தது. அதனால் கோபம் கொண்ட தகடூரை ஆண்டு வந்த அதியமான் நெடுமான் அஞ்சி, காரியின் மீது படை யெடுத்தான். இப்போரில் காரி, அஞ்சியிடம் தோல்வி யுற்றான். நாடு நகர் அனைத்தையும் இழந்தான். இறுதியில் பெருஞ்சேரல் இரும்பொறையிடமே அடைக்கலமானான்.

இரும்பொறை காரிக்காகப் படையெடுத்துச் சென்று அஞ்சியோடு போரிட்டான். காரியும் வீரத்தோடு போரிட் டான். அஞ்சி இப்போரில் தோற்றான். சேரன் வென்றான். திருக்கோவலூரை மீட்டு அதனைக் காரிக்குத் தந்தான். முன்போலவே காரி சிறப்பாக ஆட்சி புரியலானான்.

வழக்கம்போல் புலவர்கள் காரியை நாடி வந்தனர். காரியின் வெற்றிச் சிறப்புகளைக் கேள்விப்பட்ட வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் என்னும் புலவர், காரியை மிகவும் சிறப்பித்துப் பாடினார். பாண்டிய நாட்டில் வாழ்ந்த நப்பசலையார் என்ற புலவர் காரியைப் புகழ்ந்து அவனது கொடைத் திறத்தைப் பாராட்டிப் பல பாடியுள்ளார். பாடல்களைப்

இவ்வாறு கொடையாலும், வீரத்தாலும் பெரும்புகழ் பெற்றுத் திகழ்ந்த காரி திடீரென்று காலமாகிவிட்டான். இச்செய்தியைக் கேள்வியுற்ற புலவர், பாணர், கூத்தர் ஆகிய அனைவரும் நாட்டு மக்களும் மிகவும் வருந்தினர். அதன் பின்னர் அவனது மைந்தன் திருக்கண்ணன் மலையமான் நாட்டை ஆட்சி புரிந்தான்