சே குவேரா வாழ்க்கை வரலாறு..

எனக்குத் தெரிந்த இவ்வுலகில், அதிகார வர்க்கம் உலக மனிதர்களை இரண்டு அணிகளாக பிரித்து எதிரெதிராக நிற்கச் செய்யும் போது, நான் அநீதியை எதிர்த்து சாதாரண மனிதர்களுடன் இணைந்தே போராடுவேன்."

இவை எர்னஸ்டோ சே குவேரா என்ற புரட்சியாளனின் வரிகள்.சே குவேராவைப் பற்றி தத்துவஞானி ஜீன் பால் சாத்ரே "சே குவேரா வெறும் அறிவு ஜீவி மட்டும் அல்ல; அவர் நமது காலத்தின் ஒரு முழுமையான மனிதர்," என்று சொன்னார். சே குவேரா ஒரு சோஷலிசப் புரட்சியாளர். அநீதியை எதிர்த்து போராட நினைக்கும் இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரி. சே ஒரு தேர்ச்சி பெற்ற, திறமை வாய்ந்த மருத்துவர். அநீதிகளை கண்டு, அவர் தனது ஸ்டெதாஸ்கோப்பைத் தூக்கி எறிந்து விட்டு துப்பாக்கியை கையில் ஏந்தி பல கயவர்களின் மரணத்துக்கு காரணமானவர்.


ஒரு முறை சே சொன்னார்: "நான் எனது வாழ்க்கையை ஒரு மருத்துவனாக வாழ்வதா?
சே குவேராவுக்கு சிறு வயதிலேயே ஆஸ்துமா நோய் இருந்தது. இது அவரை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்திருந்தது.

அல்லது ஒரு புரட்சிக்யாளனாக வாழ்வதா? என்று எனக்குள் முடிவெடுக்க முடியாமல் ஊசலாடிக் கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் மருந்துப் பெட்டியும் இருந்தது; வெடிகுண்டுகள் நிறைந்த ஆயுதப் பெட்டியும் இருந்தது. இரண்டையும் ஒன்றாக என்னால் தூக்கி சுமக்க முடியாது. ஏதேனும் ஒன்றை மட்டுமே நான் தேர்வு செய்ய வேண்டியிருந்ததால், நான் மருந்துப் பெட்டியை விட்டு விட்டு ஆயுதப் பெட்டியையே கையில் எடுத்தேன்." இந்த கூற்றின்படி அவர் ஏன் அந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார் என்பது மறைமுகமாக விளங்கியது.
எர்னஸ்டோ குவேரா 1928 ஜூன் 14ஆம் தேதியன்று, அர்ஜென்டினாவில் ரொசாரியோ மாகாணத்தில் உள்ள சான்டா ஃபியில், ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தார். அப்பா; எர்னெஸ்டோ குவேரா லின்ச். அம்மா; செலியா டி லா செர்னா. குவேரா-செர்னா தம்பதியருக்கு பிறந்த ஐந்து குழந்தைகளில் குவேராதான் மூத்த பிள்ளையாவார்.


குவேரா தன் சிறு வயதிலேயே துறுதுறுவென்று இருப்பார். "ஐரிஷ்காரர்கள் எப்போதுமே இப்படித்தான் இருப்பார்கள்!" என்று தந்தை தனது மகனின்துறுதுறுப்பைப் பற்றிப் பெருமையோடு கூறுவார். ஆனால் குவேராவுக்கு சிறு வயதிலேயே ஆஸ்துமா நோய் இருந்தது. இது அவரின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்திருந்தது.
குவேரா ஒரு நாளும் தனது நோயைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. பெற்றோர்கள் தங்கள் மகனை தைரியசாலியாகவே வளர்த்தனர். ஆஸ்துமா நோயுடனும் குவேரா விளையாட்டுப் போட்டிகளில் தேர்ச்சி பெற்ற வீரனாகவே திகழ்ந்தார். குவேரா கால்பந்து, நீச்சல், கோல்ஃப் ஆகிய விளையாட்டுக்களில் பல வெற்றிகளை குவித்தார்.


இதனால் சக வீரர்கள் குவேராவை ஃபியூசெர்' fuser என்று அழைத்தனர். அவரின் மூர்க்கத்தனமான விளையாட்டை குறிக்கும் 'எல் ஃபுரிபன்டோ'வில் இருந்து இரண்டெழுத்தையும், அவர் அம்மாவின் பெயரிலிருந்து மூன்றெழுத்தையும் (டி லா செர்னா) (D la Cerna ) இணைத்தே அப்படி அழைத்தனர். இதற்குப் பிறகே அவர், 'சே' என்றழைக்கப்பட்டு, அப்பெயரே அவர் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருந்தது. ('சே' என்பது அர்ஜென்டினாவில், சாதாரண உரையாடல்களின் நடுவே பேசப்படும் நண்பர்களுக்கான வார்த்தை.)


சே குவேராவின் புத்தக ஆர்வத்திற்கு காரணம் அவரது பெற்றோர்களும் புத்தக விரும்பிகளாக இருந்ததுதான். சே குவேராவின் வீட்டில் சுமார் 3 ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் இருந்தன. உலகின் புகழ்பெற்ற மனிதர்களைப் பற்றிய புத்தகங்களும் அதில் அடங்கி இருந்தது.

Jawaharlal Nehru முதல் Jules Verne வரை; William Faulkner முதல் Karl Marx வரை எனப் பல பிரபலங்களின் புத்தகங்கள் அவர் வீட்டு நூலகத்தில் இருந்தது. சே குவேரா புத்தகங்களைப் படிப்பதோடு அவற்றில் இருந்து பல குறிப்புகளையும் எடுத்து வைப்பார். புத்தர், Aristotle போன்ற தத்துவஞானிகளின் கருத்துக்களையும் அவர் தனது கையேட்டில் குறித்து வைத்திருந்தார்.

பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், அன்பு மற்றும் நாட்டுப் பற்று குறித்துச் சொன்ன கருத்துக்களையும் நீட்சே, மரணம் குறித்து சொன்ன கருத்துக்களையும் சே குவேரா குறித்து வைத்திருந்தார். சிக்மன்ட் ஃபிராய்ட் சொன்ன கனவுகள் பற்றிய விளக்கம், லிபிடோ, நார்சிசம் எனப்படும் சுய மோகம், ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் ஆகியவை சே குவேராவைப் பெரிதும் கவர்ந்த விஷயங்களாகும்.
தத்துவம், கணிதம், பொறியியல், அரசியல், விஞ்ஞானம், சமூகவியல் ஆகியவை, பள்ளியில் சே குவேராவுக்கு மிகவும் பிடித்த பாடங்கள். சே குவேரா ஒரு புத்திசாலியான மாணவனாகத் திகழ்ந்ததால் அவரது ஆசிரியர்களுக்கு அவரை மிகவும் பிடித்தது. அவர் தன் பள்ளிப்படிப்பை நன்றாகப் படித்து முடித்தார்.


பள்ளிப் படிப்பை முடித்த பிறகு மருத்துவம் படிக்க முடிவெடுத்த குவேரா, 1948ஆம் வருடம் 
Buenos Airesபல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். முதல் இரண்டு வருடங்கள் அவரின் படிப்பு நன்றாகவே இருந்தது. ஆனால் 1951ஆம் வருடம் நிலைமை வேறு மாதிரியாக மாறியது.

விளையாட்டைத் தவிர சே குவேராவுக்கு மிகவும் பிடித்த மற்றொன்று, புத்தகங்கள் படிப்பது. அவர் கவிதைகள், இலக்கியங்கள், கலை தொடர்பான புத்தகங்களை விரும்பிப் படிப்பார். ஜான் கீட்ஸ், பப்லோ நெரூடா, சீசர் வலெஜோ, வாட் விட்மன் போன்ற கவிஞர்களின் கவிதைகளை சே குவேரா விரும்பிப் படிப்பார். படித்த கவிதைகளை மனப்பாடமாகவும் ஒப்பிப்பார்.



click next part